மேலும் அறிய

அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்

அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா கோழிக்கோடு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரள மாநிலம் அனைத்து வளங்களும் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான நிலப்பகுதி வனம் மற்றும் நீர்நிலைகள் நிறைந்தவையாக திகழ்கிறது. மேலும் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் அங்கு இருப்பதால் கடவுளின் தேசம் என்றும் அழைக்கப்படுகிறது.


அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்

இப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த கேரளாவில் சமீபகாலமாக போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மட்டுமன்றி சட்டவிரோத போதை மருந்தாக இருக்கும் எம்.டி.எம்.ஏ. பயன்பாடும் அதிகமாக இருக்கிறது என புகார் எழுந்து வந்தது. வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் கடத்தல்காரர்களிடம் கோடிக்கணக்கில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் சிக்குவதே அதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். போதைப் பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் வழக்கம் போல் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரிகில்(35), ரோஷன் பாபு(33) என்ற இருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை கூட்டவே அவர்களிடம் விசாரணை நடத்தினர். விமான நிலையத்தை சுற்றி பார்க்கவும், போட்டோ எடுத்துக் கொள்ளவும் வந்திருப்பதாக இருவரும் கூறியுள்ளனர். அவர்களின் பதிலால் திருப்தி அடையாத விமான நிலைய போலீசார் அவர்களை கண்காணிக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் இருவரையும் தீவிர விசாரணை வளையத்தில் கொண்டு சென்றனர். அப்போது இருவரும் அளித்த தகவல்கள் அவர்களை திடுக்கிட வைத்தது.


அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்

அபுதாபியில் இருந்து வரவுள்ள விமானம் ஒன்றில் 18 கிலோ எடையில் உயர்ரக கஞ்சா (இதன் மதிப்பு ரூ.9 கோடி) கடத்தி வரப்படுவதாகவும், அதை பெற்றுக் கொள்ளவே இருவரும் வந்திருப்பதாகவும் கூறி இருக்கின்றனர். அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற போலீசார் துரிதமாக செயல்பட ஆரம்பித்தனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான ரோஷன் பாபுவின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் அபுதாபியில் இருந்து வரும் பயணி ஒருவர் 14 பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட உயர் ரக கஞ்சாவை கடத்தி வருவதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, குருவியாக செயல்பட்ட அந்த பயணியை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி ப்ரிபெய்டு டாக்சி மூலம் தப்பிச் சென்றுவிட்டார். வழியில் டிரைவரிடம் புகைபிடிக்க வேண்டும் என்று கூறி வழியில் வண்டியை நிறுத்தி உள்ளார். பின்னர், அவர் வைத்திருந்த பைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பித்துச் சென்றிருக்கிறார். தகவலறிந்த போலீசார் பைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கஞ்சா பாக்கெட்டுகளை கைப்பற்றினர். தப்பியவரை பிடிக்க ஏதுவாக, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget