மேலும் அறிய

குட்கா வியாபாரத்தில் பிரச்சனை, சேலத்தில் கடத்தப்பட்ட இளைஞர் 3 நாட்களுக்கு பிறகு பெங்களூரில் மீட்பு.

தலைமறைவாக உள்ள கடத்தல் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் மாநகராட்சி பட்டைக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் மூலாராம் (52). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், சேலம் சின்னக்கடை வீதியில் கடந்த 3 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (22). கடந்த 2 ஆம் தேதி காலை ஜெயராம் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 4 பேர் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். காலை 6.45 மணி அளவில் திடீரென அந்த 4 பேரும் ஜெயராமின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, தயாராக இருந்த காரில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவலின் பேரில் டவுன் காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தது. குட்கா கடத்தல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது, வாலிபர் ஜெயராமை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஒரே கிராமத்தை சேர்ந்த இவர்கள், சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் வியாபாரம் செய்து வருகின்றனர்.

குட்கா வியாபாரத்தில் பிரச்சனை, சேலத்தில் கடத்தப்பட்ட இளைஞர் 3 நாட்களுக்கு பிறகு பெங்களூரில் மீட்பு.

குட்கா விற்பனை செய்ததாக ஜெயராம் மீது அம்மாப்பேட்டை காவல்துறையினர் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர். அவருடன் சுரேஷ், ஷாவலராம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது. 3 பேரும் தலா 75 ஆயிரம் நிவாரண நிதியாக செலுத்த வேண்டும் எனவும் கூறியது. அதன்படி பணத்தை செலுத்திய பிறகு ஜாமீனில் வெளியே வந்தனர். இதன்பிறகு ஆத்தூர், ஈரோடு, திருச்செங்கோடு பகுதியில் இந்த வியாபாரத்தை நடத்தி வந்துள்ளனர். இதில் ஷாவலராம் பெங்களூரில் இருந்து ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை கடத்தி வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்செங்கோடு காவல்துறையினர் லாரியுடன் மடக்கி பிடித்தனர். 

இதில் ஷாவலராம் உள்பட 2 பேரை கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்த இவர், கடந்த 20 நாளாக காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார். ஆனால் நேற்று முன்தினம் கையெழுத்து போட வில்லை. எனவே இவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இவர்கள் இருவரும் ஒன்றாக குட்கா கடத்தல் தொழில் செய்து வந்திருக்கலாம் எனவும் இதில் பணம் கொடுத்தல் வாங்கலில் இந்த கடத்தல் நடந்திருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் லாரி காவல்துறையினரிடம் பிடிபட்டதால் லாரியின் உரிமையாள ரான சுரேஷ், அதற்கான நஷ்டஈடு கேட்டு ஜெயராம், ஷாவலராம் ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம் எனவும் இதில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜெயராமை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

குட்கா வியாபாரத்தில் பிரச்சனை, சேலத்தில் கடத்தப்பட்ட இளைஞர் 3 நாட்களுக்கு பிறகு பெங்களூரில் மீட்பு.

ஆனால் அவரது தந்தை மூலாராம் நடந்தது என்ன? என்பதை தெரிவிக்க மறுத்து வந்தார். எனவே போலீசார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையில் மர்ம நபர்கள் ஜெயராமை பெங்களூருக்கு கடத்திச் சென்றிருப்பதும் தெரிவித்தது. காவல்துறையினர் நெருக்கடி காரணமாக ஜெயராமை கடத்தல் கும்பல் பெங்களூர் - மங்களூர் சாலையில் விட்டுச் சென்றது. தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஜெயராமை அங்கிருந்து மீட்டு சேலம் திரும்பினர். தலைமறைவாக உள்ள கடத்தல் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget