Shocking Video: தாய் கண்முன்னே இப்படியா? மகளுக்கு நடந்த கொடூரம்...வெளியான பகீர் வீடியோ!
ஹரியானா மாநிலத்தில் இளம்பெண்ணை நடுரோட்டில் ஒருவர் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Shocking Video: ஹரியானா மாநிலத்தில் இளம்பெண்ணை நடுரோட்டில் ஒருவர் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட தேசிய தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி, 25 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
நடுரோட்டில் பரபரப்பு
ஹரியானா மாநிலம் பாலம் விஹார் என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் இளம்பெண்ணை பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், தெருவில் நின்றுக் கொண்டு 19 வயதுடைய இளம்பெண்ணும், அவரது தாயும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு இளைஞர் அவர்களை நோக்கிச் சென்று முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின், அவர் பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து பலமுறை அந்த இளம்பெண்ணை குத்தியுள்ளார். இளம்பெண்ணின் தாய் முடிந்தவரை அவரை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் அந்த இளைஞர் அவரை கீழே தள்ளிவிட்டு, இளம்பெண்ணின் வயற்றில் பலமுறை குத்தியுள்ளது போன்று வீடியோவில் தெரிகிறது.
गुरुग्राम के पालम विहार थाना क्षेत्र में एक युवक ने युवती को चाकू मार की हत्या...युवती के परिजनों ने आरोपी को मौके से पकड़ किया पुलिस के हवाले...शादी से मना करने पर लड़की को चाकुओं से गोद कर मार डाला. pic.twitter.com/87ZH2tDwd3
— Gaurav Kumar (@gaurav1307kumar) July 10, 2023
இதனை அடுத்து, இளம்பெண்ணின் தாயார் அவரின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இதற்கிடையில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
என்ன காரணம்?
இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்தது ராஜ்குமார்(23) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பின்னர், இவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இளைஞருக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது. பின்னர், இவர்களுக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த பெண் ராஜ்குமாரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ராஜ்குமார், இளம்பெண்ணை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.