Crime : இரும்பு கம்பியால் தாக்கி, கூட்டு பாலியல் வன்கொடுமை.. பதைபதைக்க வைத்த கொடூரம்..
அந்த பெண், காணாமல் போனதாக சொல்லப்பட்ட இரண்டு நாள்களுமே, தன்னுடைய நண்பர்களுடன் அவர் செலவழித்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில், டெல்லியைச் சேர்ந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான செய்தி உள்நோக்கத்துடன் பரப்பப்பட்ட பொய்யான தகவல் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. சொத்து பிரச்னையில் குறிப்பிட்ட சிலரை சிக்க வைப்பதற்காக அந்த பெண் பொய்யாக குற்றம்சாட்டியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கை விளம்பரம் செய்வதற்காக குறிப்பிட்ட சிலருக்கு அந்த பெண் பணம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச போலீசார் நேற்று 3 பேரை கைது செய்தனர். அந்த பெண்ணை பொய்யாக கடத்தி தாக்குவது போல நாடகமாட அவர்கள் உதவி செய்ததாகக் கூறப்படுகிறது.
டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால், இந்த வழக்கு தொடர்பாக வீடியோ வெளியிட்டு ஊதி பெரிதாக்கி உள்ளார். கை கால்கள் கட்டப்பட்டு சணல் பையில் சுற்றப்பட்டு அவர் அழைத்து கடத்தப்பட்டதாக சுவாதி மலிவால் குற்றம்சாட்டியிருந்தார். அப்பெண்ணுக்கு உள்ளே இரும்பு கம்பி விடப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
அந்த பெண் கடத்தல்காரர்களால் இரண்டு நாட்களுக்கு சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் தெரிவித்திருந்தது நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியிருந்தது. இந்த சம்பவத்தை 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமையுடனும் அவர் ஒப்பிட்டு பேசியிருந்தார்.
இந்த விவரங்களை போலீசார் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், அப்பெண் குற்றம்சாட்டியிருந்த ஐந்து பேரில் நான்கு பேரை கைது செய்தபோது, சொத்து தகராறு காரணமாக தங்கள் மீது பழி போடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.
பெண் சிகிச்சை பெற்று வந்த ஜிடிபி மருத்துவமனையின் மருத்துவர்களும், மலிவால் கூறியது போல், அவருக்கு உள் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று மறுத்தனர். காணாமல் போன இரண்டு நாட்களை குறித்த பெண் தனது நண்பர்களுடன் கழித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண், காணாமல் போனதாக சொல்லப்பட்ட இரண்டு நாள்களுமே, தன்னுடைய நண்பர்களுடன் அவர் செலவழித்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்தை விரிவாக விவரித்த உத்தரப் பிரதேச பிராந்திய காவல்துறை தலைவர் பிரவீன் குமார், "அவர் இரண்டு நாட்கள் தன் இரண்டு நண்பர்களுடன் இருந்திருக்கிறார்.
ஆனால், அந்த சமயத்தில், தான் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். அவர் நண்பர்களுடன் சென்ற காரை மீட்டு உள்ளோம்.
காஜியாபாத்தில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு டெல்லிக்கு பேருந்துக்காக காத்திருந்த போது துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக அந்த பெண் கூறியுள்ளார். அவரது சகோதரன் அவரை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டதாகவும் அங்கிருந்து அவரை காரில் வந்த ஐந்து பேர் தன்னை அதில் இழுத்துச் சென்று சிறைப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார்" என்றார்.