மேலும் அறிய

வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி

ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில், அண்டை மாநிலமான தெலுங்கானாவில் புதிய வாகனத்தின் பூஜை முடிந்து குடும்பத்தினர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர். 

ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில், அண்டை மாநிலமான தெலுங்கானாவில் புதிய வாகனத்தின் பூஜை முடிந்து குடும்பத்தினர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. 8 பேர் பயணம் செய்த SUV கார் பர்மனப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது அத்தங்கி-நார்கெட்பள்ளி நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம்டைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

உயிரிழந்தவர்கள் பொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர் மாவட்டம் காவாலி மண்டலத்தில் உள்ள சிரிபுரத்தைச் சேர்ந்த டி.சுரேஷ், வனிதா, யோகுலு மற்றும் வெங்கடேஸ்வரலு என அடையாளம் காணப்பட்டனர். மேலும், காயமடைந்தவர்கள் பிடுகுரல்லா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் யு.பிரனய், ஆதிலட்சுமி, ஸ்ரீனிவாஸ் ராவ் மற்றும் கௌசல்யா என அடையாளம் காணப்பட்டனர். வாகனத்தை ஓட்டி வந்த சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அத்தங்கி-நார்கட்பள்ளி நெடுஞ்சாலையில் சனிக்கிழமையன்று, தெலுங்கானாவில் உள்ள கொண்டகட்டு ஆஞ்சநேயசுவாமி கோயிலில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வாகனம் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. அங்கு பயணிகள் தங்கள் புதிய காருக்கு பூஜை செய்யச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு புதிய கார் வாங்கிய மகிழ்ச்சி ஒரு மாதத்திற்குள் ஒரு குடும்பத்திற்கு இருளாக மாறியது.

விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சீனிவாச ராவ் பார்வையிட்டார். ஓட்டுநர் வாகனத்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாகவும், தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

“கொண்டகட்டு ஆஞ்சநேயசுவாமி கோவிலில் வழிபாடு செய்துவிட்டு, தங்கள் சொந்த கிராமமான சிரிபுரம் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது,” என்று பிடுகுரல்லா கிராமப்புற நிலைய சப் இன்ஸ்பெக்டர் மோகன் தெரிவித்தார்.

பல்நாடு மாவட்டத்தில் மற்றொரு சம்பவத்தில், சட்டெனப்பள்ளி நகரின் புறநகரில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டார்.

நகரில் உள்ள ரங்கா காலனியை சேர்ந்த டி.ரமாதேவி என்பவரே பலியானார். விவசாய நிலத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

திருமணத்துக்கு மீறிய உறவுகளே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்” போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காட்டுப்பகுதிக்குள் புகுந்து ‘திபுதிபு’ என வந்த கும்பல்.. நண்பர்கள் கண்முன்னே ரவுடி சிவகுரு வெட்டிக்கொலை...
காட்டுப்பகுதிக்குள் புகுந்து ‘திபுதிபு’ என வந்த கும்பல்.. நண்பர்கள் கண்முன்னே ரவுடி சிவகுரு வெட்டிக்கொலை...
23 வயது கர்ப்பிணி..! மிருகத்தனமான தாக்குதல், பிறப்புறுப்பில் இரும்பு கம்பி - கொலைகார கணவனின் நாடகம்
23 வயது, 5வது கரு..! மிருகத்தனமான தாக்குதல், பிறப்புறுப்பில் இரும்பு கம்பி - கொலைகார கணவனின் நாடகம்
Neet Leak: ரூ.10 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியும், 720-க்கு 107 மார்க் தான் - பெற்றோரின் மருத்துவ பேராசை
Neet Leak: ரூ.10 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியும், 720-க்கு 107 மார்க் தான் - பெற்றோரின் மருத்துவ பேராசை
ஆம்புலன்ஸுக்கும் இடையூறு... நள்ளிரவில் கோவை இளைஞர்கள் அட்டூழியம்...
ஆம்புலன்ஸுக்கும் இடையூறு... நள்ளிரவில் கோவை இளைஞர்கள் அட்டூழியம்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Leema Rose vs EPS | ”என் மேல நடவடிக்கையா? அப்போ பணத்தை கொடுங்க” EPS-ஐ நெருக்கும் லீமா ரோஸ்
4 Year Old boy Rescued |30 அடி போர்வெல் குழி!9 மணி நேர போராட்டம்..உயிருடன் சிறுவன் மீட்பு
பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilisai: பூ விக்குற பெண்ணின் காலர்ட்யூனாக தவெக பாடல் இருக்கு.. வியந்து பாராட்டிய தமிழிசை!
Tamilisai: பூ விக்குற பெண்ணின் காலர்ட்யூனாக தவெக பாடல் இருக்கு.. வியந்து பாராட்டிய தமிழிசை!
Producer K Rajan Death: பெரும் சோகம்! பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை!
Producer K Rajan Death: பெரும் சோகம்! பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை!
Producer Rajan Death: தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் பின்னணி இதுதான்!
Producer Rajan Death: தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் பின்னணி இதுதான்!
Producer Rajan about CM Vijay: சாவதற்கு முன்பு ஜனநாயகன் விஜய் பற்றி தயாரிப்பாளர் ராஜன் சொன்னது என்ன?
Producer Rajan about CM Vijay: சாவதற்கு முன்பு ஜனநாயகன் விஜய் பற்றி தயாரிப்பாளர் ராஜன் சொன்னது என்ன?
Mahindra XUV400 Pro vs Tata Nexon EV: மஹிந்திரா XUV400 ப்ரோ-வா.? டாடா நெக்ஸானா.? எந்த EV வாங்குறது பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
மஹிந்திரா XUV400 ப்ரோ-வா.? டாடா நெக்ஸானா.? எந்த EV வாங்குறது பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Thangam Thenarasu Vs Keerathana: அமைச்சர் கீர்த்தனாவின் பொய்க் கதைகளுக்கு கடிவாளம் போடுவது யார்.? கொந்தளித்த தங்கம் தென்னரசு
அமைச்சர் கீர்த்தனாவின் பொய்க் கதைகளுக்கு கடிவாளம் போடுவது யார்.? கொந்தளித்த தங்கம் தென்னரசு
Mahindra BE6 Discount: ரூ.2 லட்சம் அதிரடி தள்ளுபடி; 683 கிமீ ரேஞ்ச்; மஹிந்திரா BE6 EV வாங்குற ஐடியா இருந்தா உடனே ஓடுங்க.!
ரூ.2 லட்சம் அதிரடி தள்ளுபடி; 683 கிமீ ரேஞ்ச்; மஹிந்திரா BE6 EV வாங்குற ஐடியா இருந்தா உடனே ஓடுங்க.!
US Iran War: ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலா.? ‘புயலுக்கு முந்தைய அமைதி‘ என பதிவிட்டு பரபரப்பை கிளப்பிய ட்ரம்ப்
ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலா.? ‘புயலுக்கு முந்தைய அமைதி‘ என பதிவிட்டு பரபரப்பை கிளப்பிய ட்ரம்ப்
Embed widget