மேலும் அறிய
Advertisement
திட்டக்குடி : 15 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடூரம்.. தந்தை போக்சோவில் கைது
இவரின் மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், சக்திவேல் மனைவி மற்றும் மகள் உடன் தூங்கிக் கொண்டிருக்கும்போது, சொந்த மகளுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.
கடலூரில் தொடரும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்து மீறல்கள், திட்டக்குடி அருகே மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் கூலி தொழிலாளி அவரது மனைவி அலமேலு மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். சக்திவேல் மற்றும் மனைவி மகளுடன் சிறுமங்கலம் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்களின் மகள் வேப்பூர் அருகே தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், இந்த நிலையில் ஒரு நாள் சக்திவேல் மனைவி மற்றும் மகள் உடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது சொந்த மகளிடமே பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
இந்த நிலையில் அடுத்த நாள் சிறுமி பள்ளியில் சோகமாக இருந்து உள்ளார் இதனை கவனித்த அவரது ஆசிரியர் ஏன் சோகமாக இருக்கிறாய் என்று கேட்டு உள்ளார் அப்போது தான் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை ஆசிரியரிடம் தெரிவித்து உள்ளார்.பின்னர் ஆசிரியர் கடலூர் குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் சிறுமியிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
அப்பொழுது கடந்த இரண்டு ஆண்டுகளாக தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறி உள்ளார் இது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.பின்னர் இது குறித்து ஆவினங்குடி காவல் நிலையத்தில் குழந்தைகள் உதவி மைய அதிகாரி அளித்த புகாரின் பேரில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அவரது தந்தை சக்திவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் தந்தையே மகளை பாலியல் துன்புறுத்திய செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 29-ஆம் தேதி தான் கடலூரில் காதலன் உடன் இருந்த 22 வயது பெண்ணை மூன்று பேர் காதலன் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்தனர் இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, பின்னர் அடுத்த நாளே ராமனத்தம் பகுதியில் தண்ணீர் கேட்ட 16 வயது சிறுமியை 52 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்பொழுது மகளை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அடுத்து அடுத்து பெண்கள் மீதும் பெண் குழந்தைகள் மீதும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவது பொது மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion