மேலும் அறிய

Crime: திருவாரூர் அருகே பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை

திருவாரூர் அருகே பிரபல ரவுடி பூவனூர் ராஜ்குமார் வெட்டிப் படுகொலை. மூன்று தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் வயது 3.  இவர் வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் மீது பல்வேறு கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பூவனூர் ராஜ்குமார் அவரது வழக்கறிஞர் உள்ளிட்ட ஐந்து பேர் இன்று காலை வந்துள்ளனர்.
 
அதனைத் தொடர்ந்து நீடாமலத்தில் உள்ள பூவனூருக்கு செல்வதற்கு முன்பு தனது வழக்கறிஞரை கமலாபுரத்தில் விடுவதற்காக காரில் 5 பேரும் கமலாபுரம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது கமலாபுரத்திற்கு அருகே மன்னார்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி அதி வேகத்தில் வந்த ஸ்கார்பியோ கார் இவர்கள் வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
அதில் பின்பக்கம் அமர்ந்திருப்பவர்கள் டோர் லாக் ஆனதால் வெளியே வர முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஸ்கார்பியோ காரில் இருந்து இறங்கிய எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பூவனூர் ராஜ்குமாரை நோக்கி வந்துள்ளனர். ராஜ்குமார் அவர்களிடமிருந்து  தப்பிப்பதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைவதற்காக ஓடும் போது துரத்திச் சென்று அவர்கள் கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக அவரை வெட்டி உள்ளனர். இதில் பூவனூர் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
 
இதனையடுத்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை உள்ளிட்ட 50க்கும்  மேற்பட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.மேலும் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நீடாமங்கலம் கடைத் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை செய்யப்பட்டதா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மேலும் பூவனூர் ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்த பலர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வளரும் தமிழகம் கட்சியினர் திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் விளமல் என்கிற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தலைப்பு செய்திகள்

Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
Embed widget