மேலும் அறிய

சில ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் பெண்ணை எரித்துக் கொன்ற கள்ளக்காதலன்...!

’’சில ஆண்களுடன் கள்ள தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உல்லாசம் அனுபவித்து வந்தார். அதனை செல்போனில் வீடியோ எடுத்து வந்து, என்னிடம் காட்டினார்’’

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆனத்தூரை அடுத்த சேமங்கலம் மலட்டாற்றில் கடந்த 4ஆம் தேதி 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து ஆனத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சந்தானகிருஷ்ணன், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சில ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் பெண்ணை எரித்துக் கொன்ற கள்ளக்காதலன்...!

விசாரணையில், அந்த பெண் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அப்படியென்றால் பெண்ணை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெண்ணை எரித்துக் கொன்றதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ரெட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (58) என்பவர் கிராம நிர்வாக அலுவலர் சந்தான கிருஷ்ணனிடம் சரண் அடைந்தார். இதையடுத்து அவர், காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.


சில ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் பெண்ணை எரித்துக் கொன்ற கள்ளக்காதலன்...!

அப்போது ஏழுமலை காவல் நிலையத்தில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பகண்டை கோழிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி ஜெயலட்சுமி (51) என்பவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். இதனை தொடர்ந்து ஜெயலட்சுமியை சென்னைக்கு அழைத்து சென்றேன். அங்குள்ள ஒரு மருத்துவமனையில் ஜெயலட்சுமிக்கு வேலை வாங்கி கொடுத்தேன். இருவரும் வாடகை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தோம்.


சில ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் பெண்ணை எரித்துக் கொன்ற கள்ளக்காதலன்...!

நாளடைவில் ஜெயலட்சுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அவர், சில ஆண்களுடன் கள்ள தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உல்லாசம் அனுபவித்து வந்தார். அதனை செல்போனில் வீடியோ எடுத்து வந்து, என்னிடம் காட்டினார். அதுமட்டுமின்றி ஆண்களுடன் உல்லாசமாக இருக்கும் போதே வீடியோ கால் செய்து, எனக்கு காண்பித்தார். இதை கண்டித்தும், அவர் கேட்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

அதன்படி கடந்த 3ஆம் தேதி பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூரில் எனது மாமனார் கர்ம காரியத்திற்கு வருமாறு ஜெயலட்சுமியை சென்னையில் இருந்து அழைத்து வந்தேன். அரசூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஆனத்தூர் வழியாக சேமங்கலம் மலட்டாற்றில் நடந்து சென்ற போது, இரும்பு உளியால் ஜெயலட்சுமியை குத்தினேன். இதில் படுகாயமடைந்த அவர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். பின்னர் அருகில் கிடந்த விறகு மற்றும் குச்சிகளை சேகரித்து ஜெயலட்சுமி மீது போட்டு தீயிட்டு எரித்தேன். இதில் உடல் கருகி அவர் இறந்தார். அதன் பிறகு அங்கிருந்து சென்று விட்டேன். போலீசார் தேடியதை அறிந்ததும் சரண் அடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Embed widget