வெளிநாட்டில் முதலீடு... மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் மாறனின் சொத்துக்கள் பறிமுதல்!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறனின் 293 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவராக இருந்தவர் தொழிலதிபர் எம்ஜிஎம் மாறன் என்ற நேசமணி மாறன் முத்து. இவர் எம்ஜிஎம் குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
இவர் 2005-2006, 2006-2007 ஆகிய நிதியாண்டுகளீல் சிங்கப்பூரில் இருக்கும் இரண்டு நிறுவனங்களில் ஐந்து கோடியே 29 லட்சத்து 86,250 சிங்கப்பூர் டாலராக (இந்திய மதிப்பில் 293.91 கோடி ரூபாய்) முதலீடு செய்தார்.
ஆனால் இந்த முதலீட்டை அவர் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் மாறன் முதலீடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி இதற்கான ஆதாரங்களையும் அவர் இந்திய அரசிடம் தெரிவிக்கவில்லை.
மேலும் இந்த முதலீட்டுக்கு இந்தியாவில் செயல்படும் ‘ஆனந்த் டிரான்ஸ்போர்ட், எம்ஜிஎம், எண்டெர்டெயின்மெண்ட், எம்ஜிஎம் டைமண்ட் பீச் ரிசார்ட்ஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்களின் பெயரையும் பயன்படுத்தியிருக்கிறார்.
இது அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் குற்றமாகும். இதன் அடிப்படையில் மாறனுக்கு சொந்தமான நான்கு நிறுவனங்களின் 293.91 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்ஜிஎம் மாறன் முத்து 2005-06, 2006-07 நிதியாண்டுகளில் சிங்கப்பூரில் இரண்டு நிறுவனங்களைச் சேர்த்து, 5 கோடியே 29 லட்சத்து 86 ஆயிரத்து 250 சிங்கப்பூர் டாலர் பணம் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.293.91 கோடி) முதலீடு செய்துள்ளார்.
இந்த முதலீடு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இவ்வளவு பெரிய முதலீட்டின் ஆதாரம் இந்திய கட்டுப்பாட்டாளர்களுக்கு வெளியிடப்படவில்லை.
அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் ஃபெமா 37A(1) பிரிவு, இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருந்தபோதிலும், ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியது அல்லது இந்தியாவுக்கு வெளியே முதலீடு செய்தவரின் உள்நாட்டுச் சொத்துகளைக் கைப்பற்ற அமலாக்கத்துறை இயக்குனரகத்துக்கு அதிகாரம் அளிக்கிறது.
5 கோடியே 29 லட்சத்து 86 ஆயிரத்து 250 சிங்கப்பூர் டாலர் பணம் அந்நிய முதலீடு செய்யப்பட்டிருந்ததால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.293.91 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Watch Video: சும்மா இருந்தவர்களை நகைக் கடன் வாங்கக் கூறிய உதயநிதி; இன்று அதையே முறைகேடு என்றால் எப்படி?
Kerala Night Curfew: கேரளாவில் இரவு ஊரடங்கு: ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் ஆஃபர் கொடுத்த அரசு!