மேலும் அறிய

மகனுக்காக ஆஸ்திரேலியா சாக்லேட்.. ஆசையாக வாங்கி வந்த தந்தை.. சிறுவனுக்கு எமனாக மாறிய சோகம்!

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் சாக்லெட் சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் சாக்லெட் சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்த கங்கன் சிங் என்பவர் தனது மகனுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து சாக்லேட் கொண்டு வந்துள்ளார். 8 வயது சந்தீப் சாக்லேட் சாப்பிட்டபோது, ​​அது தொண்டையில் சிக்கி மூச்சு திணறலை ஏற்படுத்தியுள்லது. இதையடுத்து சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனை மேற்கொண்டதில், அந்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், சந்தீப் என்ற இரண்டாம் வகுப்பு மாணவன், வீட்டில் இருந்து சாக்லேட்டுகளுடன் கடந்த சனிக்கிழமை பள்ளிக்குச் சென்றுள்ளார். சாக்லேட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த சிறுவனுக்கு தொண்டையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. 

வாரங்கல் நகரத்தில் மின்சாரக் கடை நடத்தி வரும் கங்கன் சிங்கின் குடும்பத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கங்கன் சிங், 20 ஆண்டுகளுக்கு முன்பு வாரங்கலுக்குச் சென்று தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

வகுப்பில் சாக்லேட் சாப்பிட்ட சிறுவன்: 

கங்கன் சிங், ஆஸ்திரேலியா பயணத்தில் இருந்து திரும்பும் போது தனது குழந்தைகளுக்கு சாக்லேட் கொண்டு வந்துள்ளார். சந்தீப் சனிக்கிழமை தனது பள்ளிக்கு சில சாக்லேட்களை எடுத்துச் சென்றார். மதிய உணவின் போது பள்ளி பேக்கலில் வைத்திருந்த சாக்லேட்டை குழந்தை வெளியே எடுத்து சாப்பிட்டது. சாக்லேட்டை வாயில் போட்டதும் தொண்டையில் சிக்கியது. இதனால் வகுப்பில் விழுந்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதை பார்த்த பள்ளி நிர்வாகத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க, அவரை அரசு எம்ஜிஎச் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருந்தும் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மூச்சுத் திணறல் தான் மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

பெங்களூரில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவம் நடந்தது.

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் 6 வயது சிறுமியும் தொண்டையில் சாக்லேட் சிக்கி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். சமன்வி பூஜாரி என்ற 6 வயது சிறுமி தனது வீட்டிற்கு வெளியே பள்ளி பேருந்தில் ஏற முற்பட்ட போது இந்த விபத்து நடந்துள்ளது. சமன்வி பள்ளிக்கு செல்ல தயாராக இருந்தபோது, அவரது அம்மா சுப்ரிதா பூஜாரி சிறுமிக்கு சாக்லேட் கொடுத்தார். அதற்குள் பள்ளி வேன் வந்தது. இதைப் பார்த்த சமன்வி ரேப்பருடன் சாக்லேட்டையும் சேர்த்து சாப்பிட்டுள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக, பஸ்சின் கதவு அருகே மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் இறந்தார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சந்தேகத்தால் 11 ஆண்டு திருமண வாழ்க்கை! மனைவியை நாற்காலியில் கட்டி வைத்து.. கணவர் செய்த பகீர் சம்பவம்!
சந்தேகத்தால் 11 ஆண்டு திருமண வாழ்க்கை! மனைவியை நாற்காலியில் கட்டி வைத்து.. கணவர் செய்த பகீர் சம்பவம்!
வேலியே பயிரை மேய்ந்த அவலம் - பெண் போலீசுக்கு பாலியல் தொல்லையளித்த எஸ்எஸ்ஐ கைது!
வேலியே பயிரை மேய்ந்த அவலம் - பெண் போலீசுக்கு பாலியல் தொல்லையளித்த எஸ்எஸ்ஐ கைது!
15 வயது மகளிடம் சில்மிஷம்! உடந்தையாக இருந்த தாயும் கள்ளக்காதலனும் கைது!
15 வயது மகளிடம் சில்மிஷம்! உடந்தையாக இருந்த தாயும் கள்ளக்காதலனும் கைது!
அலாரம் வயரை அறுத்து ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: பூதலூரில் நள்ளிரவில் அரங்கேறிய துணிகரம்
அலாரம் வயரை அறுத்து ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: பூதலூரில் நள்ளிரவில் அரங்கேறிய துணிகரம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
"சினிமா ரீல்ஸ் அரசு: தரம் தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டு" - தவெக அரசு மீது இபிஎஸ் கடும் சாடல்!
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம் - அதிமுக நிர்வாகி மன்னன் கைது!
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம் - அதிமுக நிர்வாகி மன்னன் கைது!
DMK: தமிழகத்தில் ஹைதராபாத் போன்ற துயரம் நடக்க விஜய் அரசு ஆசைப்படுகிறதா? 6 மணிக்காட்சிக்கு திமுக எதிர்ப்பு!
DMK: தமிழகத்தில் ஹைதராபாத் போன்ற துயரம் நடக்க விஜய் அரசு ஆசைப்படுகிறதா? 6 மணிக்காட்சிக்கு திமுக எதிர்ப்பு!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிரடி! சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிரடி! சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!
ஊருக்கு கிளம்ப ரெடியா? - உங்க ஊரு பஸ் ஏற எந்தப்பேருந்து நிலையம் போகனும்?
ஊருக்கு கிளம்ப ரெடியா? - உங்க ஊரு பஸ் ஏற எந்தப்பேருந்து நிலையம் போகனும்?
Scene Movie Review : சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா...சீன் திரைப்பட விமர்சனம்
Scene Movie Review : சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா...சீன் திரைப்பட விமர்சனம்
Ration Card Holder: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. உடனே வங்கி கணக்கை செக் பண்ணுங்க.!
Ration Card Holder: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. உடனே வங்கி கணக்கை செக் பண்ணுங்க.!
Embed widget