மேலும் அறிய

சேலம் : உயிரிழந்த பெண்.. தனியார் மருத்துவமனைக்கு சீல்.. மருத்துவ சங்கம் வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

மருத்துவமனை மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்துள்ள ஜலகண்டாபுரம் சவுரியூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (31), விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (28). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றது. இந்த தம்பதிக்கு 11 வயதில் பெண் குழந்தையும், 7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், சங்கீதாவிற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக, கடந்த 20 நாட்களுக்கு முன்பு, எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு, வீடு திரும்பிய சங்கீதாவுக்கு 2 வாரங்கள் கழித்து, அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மீண்டும் அதே மருத்துவமனை சங்கீதாவை சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், வயிற்றில் ரத்தம் கட்டியுள்ளதாகவும், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியதன் பேரில், 2 வது முறையாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டது.

சேலம் : உயிரிழந்த பெண்.. தனியார் மருத்துவமனைக்கு சீல்.. மருத்துவ சங்கம் வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

அதன் பின்னர், வீட்டில் இருந்தபடி மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு வந்த சங்கீதாவுக்கு, கடந்த 29 ஆம் தேதி அன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை அந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 3 வது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் உடல்நிலை மோசமான நிலையில் சங்கீதா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் தான், சங்கீதா உயிரிழந்ததாக கூறிய அவரது உறவினர்கள், தனியார் மருத்துவமனையில் இருந்த பொருட்களை உடைத்து சூறையாடினர். இதுபற்றி தகவலறிந்த தாசில்தார் லெலின், மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் விசாரணை நடத்தினர். ஆனால், அதனை ஏற்க மறுத்து, சங்கீதாவின் உறவினர்கள் சங்கீதா மறைவிற்கு காரணமான மருத்துவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இதுகுறித்து சங்கீதாவின் உறவினர்கள் கூறுகையில், மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் தான் சங்கீதா இறந்துள்ளார். எனவே, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கைது செய்து, மருத்துவமனைக்கு சீல் வைக்க தாசில்தார் மற்றும் மருத்துவதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

சேலம் : உயிரிழந்த பெண்.. தனியார் மருத்துவமனைக்கு சீல்.. மருத்துவ சங்கம் வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

இதனைத் தொடர்ந்து மூன்று முறை அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், எடப்பாடி அரசு தலைமை மருத்துவர் செந்தில்குமரன் முன்னிலையில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. முன்னதாக, தீவிர சிகிச்சையில் இருந்த மூன்று நோயாளிகள் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கும், சாதாரண சிகிச்சையில் இருந்த சுமார் 20 நோயாளிகளை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து, சங்கீதாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் சீல் வைத்து தவரான நடவடிக்கை என இந்திய மருத்துவ சங்கத்தின், அகில இந்திய போராட்ட குழுவின் உதவிதலைவர் பிரகாசம் குற்றம் சாட்டினார்.

மருத்துவமனை மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget