மேலும் அறிய
Advertisement
Kanchipuram: மொட்டை அடித்து மாறுவேடம்..! அண்ணா யுனிவர்சிட்டிக்கு விபூதி அடித்து 3.80 கோடி முறைகேடு செய்த ஊழியர்!
காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் 3.85 கோடி ரூபாய் முதலீடு செய்த ஊழியரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்
காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ( university college of engineering )
காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் , அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான உறுப்பு கல்லூரியான, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி காஞ்சிபுரம் என்ற கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில், நான்கு துறைகளில் சுமார் 1000 மாணவ மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தனித்தனியே தங்கி பயில்வதற்கு விடுதி வசதிகளும் உள்ளன.
முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்
இக்கல்லூரியில், வங்கி கணக்குகளை நிர்வகித்து வந்த பிரபு என்பவர் செய்த முறைகேடு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபு , இக்கல்லூரியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் கல்லூரி கணக்கு வழக்குகளை நிர்வகித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளிடம் டெபாசிட் பணம் பெறுவது வழக்கம். அவர் பெறப்படும் பணம் வங்கியில் நிரந்தர வைப்பு நிதி ( FD) கணக்கில் செலுத்தப்படும். நான்கு வருட படிப்பை படித்து முடித்த பிறகு மாணவ, மாணவிகளுக்கு அந்த பணம் மீண்டும் செலுத்தப்படும். பிப்ரவரி மாதமே , செலுத்த வேண்டிய தொகை வரை செலுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது.
வங்கி கணக்கில் இருந்த "401" ரூபாய்
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவ மாணவிகள் தொடர் புகாரை தெரிவித்து வந்துள்ளனர். இதனை அடுத்து இதுகுறித்து விசாரிப்பதற்காக கல்லூரி முதல்வர் கவிதா, வங்கி கிளைக்கு சென்று விசாரித்த பொழுது வங்கி கணக்கில் 401 மட்டுமே இருந்துள்ளது. இதேபோல் பிற வங்கி கணக்குகளையும் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகப்பட்டு, அவற்றையும் விசாரிக்க துவங்கி உள்ளனர். கல்லூரிக்கு சொந்தமாக உள்ள 9 வங்கி கணக்குகள் மற்றும் 7 நிரந்தர வைப்பு வங்கி கணக்குகளை ஆய்வு மேற்கொண்ட பொழுது, அவற்றிலும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில், 3 கோடியே 80 லட்சம் பல்வேறு வகைகளில் முறைகேடு சம்பவங்களில் ஈடுபட்டு பணத்தை எடுத்து பிரபு செலவு செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு
இதுகுறித்து கல்லூரி முதல்வர் கவிதா காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரபுவை தேடி வந்தனர். தன்னை காவல்துறையினர் தேடுகிறார்கள் என தெரிந்தவுடன் தலைமறைவான பிரபு பல்வேறு இடங்களில் சுற்றி தெரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரபு ஆந்திரா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினர் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆந்திரா சென்ற போலீசார் பிரபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட பிரபுவிடம் விசாரித்ததில், ஆருத்ரா ஐஎப்எஸ் போன்ற நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion