மேலும் அறிய

தகாத உறவால் இளைஞர் படுகொலை - அதிர்ச்சியில் திண்டுக்கல்

சௌமியாவுக்கும் ஸ்டாலினுக்கும் தகாத உறவு இருந்ததாகவும் அதனை செந்தமிழ்ச்செல்வன் பலமுறை கண்டித்தும் கைவிடாததால் எச்சரித்து உள்ளார்.

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டி ஊராட்சி தனுஷ்கோடி காலனியில் திருமண பந்தத்தை மீறிய தகாத உறவினால் வீடு புகுந்து வெட்டியதில் ஸ்டாலின் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஐந்து பேரை  ஒரு மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டி ஊராட்சி தனிஷ்கோடி காலனியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் செந்தமிழ் செல்வன். அவருக்கு சௌமியா என்ற மனைவியும் மூன்று வயது மகளும் உள்ளார். இவர் அப்பகுதியில் மர சாமான்கள் பிளைவுட் தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் பெரியசாமி என்பவர் தனது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்துள்ளார். இதில் பெரியசாமி கூலி வேலையும் மூத்த மகன் ஸ்டாலின் டாட்டா ஏசி வாகனம் ஓட்டியும் மீன்பிடிக்கும் வேலையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அருகில் வீட்டில் இருக்கும் செந்தமிழ் செல்வன் மனைவி சௌமியாவுக்கும் ஸ்டாலினுக்கும் தகாத உறவு இருந்ததாகவும் அதனை செந்தமிழ்ச்செல்வன் பலமுறை கண்டித்தும் கைவிடாததால் ஸ்டாலினை எச்சரித்து உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்  ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சௌமியா செல்போனில் வாழ்த்து குறுந்தகவல் தெரிவித்துள்ளார் எனவும் இதனை அறிந்த செந்தமிழ் செல்வன் சௌமியாவை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்டாலின் வீட்டில் சகோதரர் மற்றும் தந்தையுடன் படுத்துக் கொண்டிருக்கிற தகவலை அறிந்த செந்தமிழ் செல்வன் அவரது மைத்துனர் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மதன குமார் அவரது நண்பர்கள் பாலமுருகன் பிரகாஷ் மற்றும் அவரது சித்தப்பா காந்தியுடன் செந்தமிழ் செல்வன் வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் ஸ்டாலினுக்கு   பலத்த வெட்டு காயங்களும் அதை தடுக்க வந்த அவரது தந்தை பெரியசாமிக்கு முதுகு மற்றும் தொடை உள்ளிட்ட பகுதியில் கத்திக் குத்துகளும்   அவரது தம்பி வெங்கடேஷ்க்கு வெட்டு காயங்களும் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது செந்தமிழ் செல்வன் உட்பட அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து பார்க்கும்பொழுது ஸ்டாலினும் தந்தையும் விட்டு காயங்களுடன் இருந்துள்ளார்கள். அவர்களை உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம்  ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் ஸ்டாலினை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் பலத்த காயமடைந்த அவருடைய தந்தை பெரியசாமி மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவல் தெரிந்த ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் தங்கராசு தலைமையிலான அம்பிளிக்கை காவல்துறையினர் அப்பகுதி காட்டுக்குள் சுற்றித்திரிந்த வாலிபர்களை பிடித்து விசாரித்ததில் அப்பகுதியில் கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி வந்ததை ஒப்புக்கொண்டதன் பேரில் அவர்கள் 5 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்திய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget