மேலும் அறிய

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திருடும் பகல் திருடன் - சிக்கியது எப்படி..?

அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்களின் வீடுகளை குறி வைத்து,  பகல் நேரங்களில் மட்டும் பூட்டிய வீடுகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திருடும் பழக்கம் உள்ளவர்.

அரூர் பகுதியில் ஆளில்லா வீட்டில் கொள்ளையடிக்கும் பகல் கொள்ளைக்காரனை, அரூர் காவல் துறையினர் கைது செய்து, 17 சவரன் தங்க நகையை பறிமுதல் பறிமுதல் செய்தனர்.
 
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த அ.ஈச்சம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் ஜெயக்குமார்,(47)-செல்வராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.  கடந்த 6 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, இந்த தம்பதியினர் இருவரும் தங்களது வீட்டை பூட்டிவிட்டு இருவரும் தனித்தனியாக வேலைக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து வேலையை முடித்து விட்டு மாலை 5.30 மணிக்கு வீடு திரும்பிய ஜெயக்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் தங்க செயின், 4 பவுன் வளையல், நான்கரை பவுன் ஆரம், ஒன்றரை பவுன் பிரேஸ்லெட் என மொத்தம் 17 பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திருடும் பகல் திருடன் - சிக்கியது எப்படி..?
 
அதேப்போல் அதேப்பகுதியில் உள்ள செந்தாமரை வீட்டை பூட்டிவிட்டு, தாயாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் மகள் ஶ்ரீ தேவி, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுவதால் அவரும் பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாலை வந்து பார்த்துபோது வீட்டின் பூட்டை, பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்துள்ளது‌. இதனை தொடர்ந்து பீரோவில் இருந்த 1 சவரன் தங்க நகை மற்றும் ரூ.20,000 திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திருடும் பகல் திருடன் - சிக்கியது எப்படி..?
 
இதுகுறித்து ஜெயக்குமார் மற்றும் செந்தாமரை ஆகியோர் அரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த, காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகளை பரிசோதனை செய்தனர். அப்பொழுது ஒருவர் சுற்றி திரிவது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்தும், செல்போன் சிக்னலை வைத்து, விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் அடிக்கடி சுற்றி திரிந்த கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(30) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திருடும் பகல் திருடன் - சிக்கியது எப்படி..?
 
இதனை தொடர்ந்து காவேரிப்பட்டினத்தில் இருந்த ராஜ்குமாரை, காவல் துறையினர் கைது செய்து அரூருக்கு அழைத்து வந்தனர். மேலும் விசாரணை நடத்தியதில், அ.ஈச்சம்படி பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடித்து தெரியவந்தது.  இந்த கொள்ளையன் அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்களின் வீடுகளை குறி வைத்து,  பகல் நேரங்களில் மட்டும் பூட்டிய வீடுகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திருடும் பழக்கம் உள்ளவர். மேலும் விசாரணையில்,  ஏற்கனவே அரூர் பகுதியில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 10 வழக்குகள் இருந்து வருகிறது. தொடர்ந்து ராஜ்குமாரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 17 பவுன் தங்க நகைகள் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகம் செல்வது போல, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கொள்ளைடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
 
 

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget