மேலும் அறிய

ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ.13 லட்சம் கிடைக்கும்; ரூ.2000 நோட்டுகளை மாற்ற நூதன மோசடி

இதனை முழுமையாக நம்ப வேண்டும் என்பதற்காக அட்டை பெட்டிகளில் 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருக்கும் வீடியோவை சுரேஷ்வுக்கு அனுப்பி உள்ளனர்.

தருமபுரி அருகே முன்னாள் அமைச்சரின் 2000 நோட்டுகளை மாற்றுவதால், பத்து லட்சம் ரூபாய் கொடுத்தால் பதிமூன்று லட்ச ரூபாய் கிடைக்கும் என கூறி, நூதன முறையில் மோசடி செய்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேவுள்ள ராமியம்பட்டி கிராமத்தை சேர்ந்த டிராவல்ஸ் தொழில் நடத்தி வரும் சுரேஷ் (32) என்பவரிடம் பென்னாகரம் அருகேவுள்ள சீலநாய்க்கனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ( 38), கோபாலாம்பட்டி நடூரை சேர்ந்த ராஜேந்திரன் (44), காளியம்மன் கோவில் பஸ் ஸ்டாப் கோட்டுப்பட்டி சேர்ந்த செல்வராஜ் (35)  ஆகிய மூன்று பேர்.  மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நடுப்பட்டியை சேர்ந்த ஹரிபாபு (38) ஆகிய நான்கு பேரும் சுரேஷிடம் அதிமுக முன்னாள் அமைச்சரின் பணம் கோடி கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டாக இருப்பாதாகவும் அந்த பணத்தினை மாற்றி வருவதாகவும் ரூ.10 லட்சம் பணத்திற்கு  500 ரூபாய் நோட்டாக கொடுத்தால், அதற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக 13 லட்ச ரூபாய் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்பவைத்துள்ளனர். 

ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ.13 லட்சம் கிடைக்கும்; ரூ.2000 நோட்டுகளை மாற்ற நூதன மோசடி
 
இதனை முழுமையாக நம்ப வேண்டும் என்பதற்காக அட்டை பெட்டிகளில் 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருக்கும் வீடியோவை சுரேஷ்வுக்கு அனுப்பி உள்ளனர். அந்த வீடியோவை பார்த்த சுரேஷ், அதனை நம்பி அவர்கள் சொல்வதற்கு ஏற்ப நடந்து கொண்டார். தொடர்ந்து நால்வரும் சுரேஷை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு,  2000 நோட்டுகள் கட்டுக்கட்டாக சுரேஷிடம் 13 லட்ச ரூபாய் பணம் இருப்பதாக கூறி,  பணக்கட்டுகளை போல வெறும் காகிதங்களை ஒரு பையில் பண்டலாக கட்டி  கொடுத்துள்ளனர். தொடர்ந்து நோட்டுகளை பார்த்த சுரேஷ்க்கு, போலி தாள்களை கொடுத்து, தனது கவனத்தை திசை திருப்பி நூதனமாக ஏமாற்றியது தெரிய வந்திருக்கிறது.
 
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சுரேஷ், போலியாக கொடுத்த பண கட்டுகளை கொண்டு வந்து அதியமான் கோட்டை காவல் துறையிடம் புகார் அளித்தார். அதியமான் கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், செல்வராஜ், ஹரிபாபு ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் குற்றத்தை ஒப்பு கொண்டனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை மீட்டு, போலியாக கொடுத்த போலி 2000 தாள்களை பறிமுதல் செய்து, நான்கு பேரையும் கைது செய்தனர்.  முன்னாள் அமைச்சரின் 2000 தாள் பணத்தை மாற்றுவதாக கூறி, நூதன முறையில் மொசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Embed widget