திருடு போன பொருள்: சூனியக்காரர் சொன்ன சொல் - வீட்டுப் பணிப்பெண்னை நிர்வாணமாக்கி அடித்த கொடூரம்
டெல்லியில் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் பதைபதைக்க வைத்துள்ளது.
டெல்லியில் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் பதைபதைக்க வைத்துள்ளது.
டெல்லியில் வீட்டுப் பணிப் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் நடுங்கவைப்பதாக உள்ளது. தெற்கு டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதியில் ஒரு பெரும் பணக்காரக் குடும்பத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். அந்த வீட்டில் 10 மாதங்களுக்கு முன்னர் சில விலையுயர்ந்த பொருட்கள் திருடு போயுள்ளது. அந்தப் பொருட்களைக் கண்டுபிடிக்க சூனியக்காரர்கள் உதவியை நாடியுள்ளனர் அக்குடும்பத்த்னர். இந்நிலையில் தான் அந்த சூனியக்காரர்கள் வீட்டில் இருந்து ஒரு குறிப்பிட்டப் பெண்ணைக் காட்டி இவர் தான் திருடியிருப்பார் எனக் கூறினர்.
எலுமிச்சை சாதத்தில் மாந்த்ரீகம்:
இதனைக் கண்டுபிடிக்க அந்த சூனியக்கார குழு வீட்டில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் எலுமிச்சை கலந்த அரிசியை சாப்பிடக் கொடுத்துள்ளார். அதை சாப்பிடுபவர்களில் யாருடைய வாய் சிவக்கிறதோ அவர்கள் தான் திருடியவர்கள் என்று கூறியது. அதேபோல் அதை அனைத்து பணியாளர்களும் சாப்பிட்டனர். அதில் 43 வயது பெண் ஒருவரின் வாய் சிவந்தது. உடனே அவர் தான் திருடியவர் என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் அந்தப் பெண்ணை நிர்வாணமாக்கி அடித்தனர்.
மேலும் அந்தப் பெண்ணை ஆடையின்றி ஓர் அறையில் அடைத்து வைத்தனர். சம்பவம் நடந்த பண்ணை வீடு அன்சால் விலாஸ் பகுதியில் உள்ளது. ஒரு நாள் முழுவதும் அந்தப் பெண் ஆடையின்றி தவித்த நிலையில் கழிவறை செல்ல உடையைத் தருமாறு கதறியுள்ளார். அவருக்கு கொஞ்சம் ஆடையை வீட்டின் உரிமையாளர்கள் கொடுத்தனர். அதை அணிந்து கொண்டு கழிவறை சென்றவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
பின்னர் வீட்டு உரிமையாளரிடம் தான் எலி மருந்தை சாப்பிட்டுவிட்டதாகக் கூறினார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போதுதான் போலீஸுக்கு தகவல் தெரியவந்தது. போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் வீட்டு வேலைக்காக ஆள் வைப்பது வழக்கமாகிவிட்டது. சில வீடுகளில் காலை தேநீர் முதல் இரவு உணவு தயாரிப்பது வரை அனைத்து வேலைகளையும் செய்வது வீட்டு பணியாளர் தான்.
உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் டெல்லியில் வந்து குவிந்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் இவர்களின் கோரிக்கைகள் ஒன்றுபோலவே இருக்கின்றன. வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான தேசிய அமைப்பு (National Platform for Domestic Workers) ஒன்று இருக்கிறது.
வேலைக்கான ஊதியத்தையும், பணி நேரத்தையும் நிர்ணயிப்பது, மாதத்திற்கு நான்கு நாள் விடுமுறை, உரிய முறையில் நடத்துவது, சமூக பாதுகாப்பு ஆகியனவே இவர்களின் பலகால கோரிக்கையாக உள்ளது.
மேலும், விடுமுறை எடுக்க எங்களுக்கு உரிமையில்லை, ஏன் சம்பளம் கேட்பது கூட தவறானதாக கருதப்படும். ஊதிய உயர்வு வேண்டும் என்று கேட்கவே அச்சமாக இருக்கும். எத்தனை வேலை செய்தாலும் அதில் திருப்தியடையாமல், சின்ன வேலை தானே, இதையும் முடித்துவிட்டுப் போ என்று அதிகாரம் செய்வார்கள் முதலாளிகள் என்பதே அவர்களின் புலம்பலாக உள்ளது.
இவற்றையும் தாண்டி டெல்லியில் நடந்துள்ள இந்த சம்பவங்கள் போல் பல கொடூரங்களும் சத்தமின்றி அரங்கேறிவிடுகின்றன.