மேலும் அறிய

Delhi: சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்... கண்டும் காணாமல் கடந்து சென்ற மக்கள்! டெல்லியில் அதிர்ச்சி

டெல்லியில் 16 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Delhi crime : டெல்லியில் 16 வயது சிறுமியை, இளைஞர் ஒருவர் 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது மற்றொரு சம்பவம் டெல்லியில் அரகேறியுள்ளது.

20 முறை கத்தியால் குத்திய கொடூரம்

டெல்லியில் ஷஹபாத் டெய்ரி என்ற பகுதியில் 16 வயது சிறுமியை சாஹில் என்ற 20 வயது இளைஞர் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, நேற்று மாலை ஷஹபாத் டெய்ரி பகுதியில் உள்ள ஒரு தெருவில் அந்த சிறுமியும், இளைஞரும் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு இளைஞர் சாஹில் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த சிறுமியை குத்தியுள்ளார். அதன்பிறகு ஆத்திரம்  தாங்காமல் மீண்டும் அந்த சிறுமியை ஈவு இரக்கமின்றி சுமார் 20 முறை கொடூரமாக குத்தியுள்ளார். இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

வேடிக்கை பார்த்த மக்கள்

அதன்பிறகு, அந்த இடத்தில் சற்று தூரம் சென்ற இளைஞர், மீண்டும் ஆத்திரம் தீராததால் மீண்டும்  ஓடி வந்து அருகில் கிடந்த கல்லை எடுத்து அந்த சிறுமி  மீது போட்டுள்ளார். இதற்கிடையில் அந்த தெருவில் இருக்கும் அனைவரும் வேடிக்கை பார்த்தப்படியே இருந்துள்ளனர். அந்த இளைஞர் சிறுமியை கொடூரமாக தாக்கிக் கொண்டிருக்கும்போது ஒருவர் கூட அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தப்படி நின்றுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

அதன்பின்பு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்பு இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கொடூரமாக ஈவு இரக்கமின்றி தாக்கிய சாஹில் என்ற இளைஞரை தேடி வருகின்றனர்.  

காரணம் என்ன?

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்,”16 வயது சிறுமியும், 20 வயதான இளைஞர் சாஹிலும் ஒருவரைக்கொருவர் விரும்பி உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், அந்த சிறுமி தனது நண்பரின் பிறந்தநாளுக்கு நேற்று சென்றுள்ளார். அப்போது பிறந்தநாள் நிகழ்ச்சி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பும்போது, இளைஞர் சாஹிலை சந்தித்துள்ளார்.

அதாவது, சம்பவந்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதில்  தான் இளைஞர் சாஹில் ஆத்திரமடைந்து, அந்த சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரிகிறது” என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி வழக்கு.. 4 பேருக்கு ஆயில் தண்டனை உறுதி செய்த உயர்நீதிமன்றம் !
மதுரையில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி வழக்கு.. 4 பேருக்கு ஆயில் தண்டனை உறுதி செய்த உயர்நீதிமன்றம் !
Salem: பள்ளிக்குள் ஆசிரியை வெட்டிக்கொலை.. குழந்தையுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு!
Salem: பள்ளிக்குள் ஆசிரியை வெட்டிக்கொலை.. குழந்தையுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு!
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்... கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி 'ப்ராமிஸ்'!
TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்... கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி 'ப்ராமிஸ்'!
Samrat Choudhary: எடுத்த சபதம் முடித்த பீகார் புதிய முதலமைச்சர்.. யார் இந்த சாம்ராட் சௌத்ரி?
Samrat Choudhary: எடுத்த சபதம் முடித்த பீகார் புதிய முதலமைச்சர்.. யார் இந்த சாம்ராட் சௌத்ரி?
Durai Vaiko: தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ தான்.. மதுரை தெற்கு தேர்தல் பரப்புரையில் துரை வைகோ விமர்சனம்!
Durai Vaiko: தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ தான்.. மதுரை தெற்கு தேர்தல் பரப்புரையில் துரை வைகோ விமர்சனம்!
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
Seeman: ”15 வருஷமா ஒன் சைடு லவ்... புரிஞ்சிக்க மாட்டா..” ஃபீலிங்காக பேசிய சீமான்
Seeman: ”15 வருஷமா ஒன் சைடு லவ்... புரிஞ்சிக்க மாட்டா..” ஃபீலிங்காக பேசிய சீமான்
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
Pope Leo Vs Trump: “அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
“அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
Embed widget