மேலும் அறிய

Cyber crime: ஆன்லைன் மோசடியில் சிக்கிய மாநிலம்; ஒரே நாளில் ரூ.33.49 லட்சம் மோசடி

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் 6 பேரிடம் ரூ.33.49 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1930 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் 6 பேரிடம் ரூ.33.49 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகனை சென்னையை சேர்ந்த ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதனை நம்பி பழனிசாமியின் மகன் ரூ.15.40 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அந்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை, அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.

இதேபோல் கடலூர் சாலையில் உள்ள வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த கவுதமன் ரூ.50 ஆயிரம் இழந்துள்ளார். மேலும் ரெட்டியார்பாளையம் சேர்ந்த மானேகிரி என்பவரை மர்ம நபர் ஒருவர் டெலிகிராம் மூலம் தொடர்புகொண்டு வீட்டிலிருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதனை நம்பி மானேகிரி ரூ.16.51 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதில் சம்பாதித்து பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.

இதேபோல் கோர்டுகாடு பகுதியை சேர்ந்த கவுசல்யா என்பவர் ரூ.28 ஆயிரமும், ஒயிட் டவுன் சேர்ந்த கவுசல்யா ரூ.66 ஆயிரமும் இழந்துள்ளார். மேரி உழவர்கரை சேர்ந்த மஞ்சிலி ரூ.14 ஆயிரம் இழந்துள்ளார். இவர்கள் மொத்தமாக ரூ.33.49 லட்சத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தொடர்ந்து ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரை 1930 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.

அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.

சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க

மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
India Replies Trump: ''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
Ramadoss Vs Anbumani: அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
India Replies Trump: ''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
''ட்ரம்ப்பின் வரி விதிப்பு நியாயமற்றது''; தேச நலனை காக்கும் வகையில் நடவடிக்கை என இந்தியா பதில்
Ramadoss Vs Anbumani: அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
அய்யா, உங்க மோதலுக்கு முடிவே இல்லையா.? அன்புமணி கூட்டும் பொதுக்குழுவிற்கு எதிராக ராமதாஸ் வழக்கு
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
இந்தியாவை போட்டுத் தாக்கிய ட்ரம்ப்; 50% வரி விதிப்பு - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு.?
PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Embed widget