மேலும் அறிய

ஆபாச படங்களை அழிக்க வேண்டும்..ஏமாறாதீங்க.. பணத்தை இழக்காதீங்க..!

தமிழகம் முழுவதும் நிறைய நபர்களிடம் இவர் பணம் பறித்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

தஞ்சாவூர்: உறவுக்கார பெண்ணின் ஆபாச படங்களை அழிக்க வேண்டும் எனக் கூறி போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் பேசி விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர். இவர் தமிழ்நாடு முழுவதும் கைவரிசை காட்டியது அம்பலமானது. இதுபோன்று வரும் போன் கால்களை நம்பி பணத்தை இழக்காதீர்கள் என்று சைபர் கிரைம் போலீசார் அட்வைஸ் செய்ததுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் ராஜா (45). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவருடைய செல்போனில் தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் பேசினார். அப்போது அவர், நான் தல்லாரகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன் எனக்கூறி,  ஒரு நபரை கைது செய்த போது அவரது செல்போனில் உங்களது உறவுக்கார பெண்ணின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளது.

இந்த ஆபாச படங்கள், வீடியோக்களை சைபர் கிரைம் போலீசில் கொடுத்து அழிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என ராஜாவிடம் பொய்யான தகவலை கூறியுள்ளார். மேலும் அவரை மிரட்டி ஏமாற்றும் உள்நோக்கத்தில் ரூ.7 ஆயிரத்தை பெற்றுக் கொண்டதாக ராஜா தஞ்சை சைபர் கிரைம் போலீசில், புகார் அளித்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை கொண்டு அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என கண்காணித்தனர். அப்போது, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாறி, மாறி அவரது செல்போன் எண் காண்பித்தது. இதையடுத்து அந்த மர்மநபரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரோஸ்லின் அந்தோணியம்மாள், கார்த்திக், ஏட்டு இளையராஜா, போலீசார் சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்திய போது, அந்த மர்ம நபர் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கோஸ்கோட் என்னும் இடத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று அந்த மர்மநபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த பாண்டிய பிரகாஷ் (35) என்பது தெரியவந்தது.

இவர், தனது செல்போனில் இருந்து ஏதாவது ஒரு நம்பரை தொடர்பு கொண்டு தான் சப்-இன்ஸ்பெக்டர் அல்லது இன்ஸ்பெக்டர் என கூறி அவர்களை மிரட்டி, அவர்களது தகவல்களை எல்லாம் அனுப்ப சொல்லி, அதில் உள்ள பெண்களின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்களது ஆபாச படங்கள் மற்றும் வீடியோ  உள்ளது என தன்னிடம், அதை சைபர் கிரைம் போலீசில் கொடுத்து அழிக்க வேண்டும் எனவும், அதற்கான தொகையை அனுப்ப வேண்டும் எனவும் கூறி மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இதுபோன்று தமிழகம் முழுவதும் நிறைய நபர்களிடம் இவர் பணம் பறித்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து பாண்டிய பிரகாசை போலீசார் கைது செய்து தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர். இதுபோன்று அடையாளம் தெரியாத நபர்கள் போலீஸ் துறையில் இருந்து பேசி பல்வேறு காரணங்களை கூறி மிரட்டி பணம் கேட்டால் அதை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget