மேலும் அறிய
சென்னை விமான நிலையத்தில் 1.38 கிலோ தங்கம் பறிமுதல்: சுங்க அதிகாரிகள் அதிரடி!
சென்னை விமான நிலையத்தில் 1.38 கிலோ மதிப்புள்ள தங்கம் பறிமுதல்., துபாயில் இருந்து சென்னை வந்த பயணியிடம், ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1.38 கிலோ தங்கத்தை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

1.38 கிலோ மதிப்புள்ள தங்கம்
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பல்வேறு கடத்தல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் அதிக அளவு தங்கம் கடத்தப்படுவது வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்தில் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் பெரிய அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர் தொடர்ந்து பயணிகளை கண்காணித்து வந்தனர். சந்தேகத்திற்குரிய பார்சல்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களை தகவல்களின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் பரிசோதனை செய்து வந்தனர்.தொடர்ந்து சோதனையில் செய்து கொண்டிருந்த பொழுது , சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அந்த விமானத்தை வந்த பயணி ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் தனியாக நின்று கொண்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து சுங்க இலாகா அதிகாரிகள், அவர் கொண்டு வந்த பைகள் வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்தன. அவற்றை சோதனை செய்தபோது, அதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குழாய்களால் வடிமைக்கப்பட்ட, சமையலறை அலமாரி இருந்தது. இதனை பார்த்த சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் வரத் துவங்கிய காரணத்தினால், அதை பிரித்து பார்த்தபோது, 1.38 கிலோ எடையுள்ள தங்க கம்பிகள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குழாய்களுக்குள், மறைத்து வைக்கப்பட்டிருந்தன. நூதன முறையில் கடத்திவரப்பட்ட இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.60 லட்சம். இதையடுத்து தங்கம் கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டார்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த சில வருடங்களாகவே, போதைப்பொருள் தங்கம் கடத்தல் ஆகியவை அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனை தடுப்பதற்கு விமான நிலைய நிர்வாகம் சார்பில், பல்வேறு உயர்ரக நவீன கருவிகளை பயன்படுத்தி பயணிகளை சோதனை செய்தாலும் நூதன முறையில் பயணிகள் போர்வையில், கடத்தல்காரர்கள் தொடர்ந்து கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
விவசாயம்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement