மேலும் அறிய

கடலூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு

’’பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகை கொடுத்து, ஈடு செய்ய முடியாது என்றாலும் மாநில அரசு திட்டங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து 10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவு’’

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் 8ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினருக்கு தினமும் இரவு சாப்பாடு கொண்டு செல்வது வழக்கம். அதன்படி கடந்த 12.2.2019 அன்று அந்த சிறுமி, தனது உறவினர் வீட்டுக்கு இரவு 7 மணி அளவில் சாப்பாடு கொண்டு சென்றாள். பின்னர் சாப்பாடு கொடுத்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது, சேத்தியாத்தோப்பு- கும்பகோணம் சாலையில் உள்ள அவர்களது குல தெய்வம் கோவில் அருகில் வந்த போது, குமாரக்குடியை சேர்ந்த பாலகுரு என்பவரின் மகன் திலகர் என்கிற குணசேகரன் (34) மற்றும் தொழிலாளி கட்டமணியார் என்கிற ஜெயசங்கர் (49) ஆகிய 2 பேரும், அந்த சிறுமியை வழிமறித்தனர்.
 
கடலூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு
 
தொடர்ந்து அந்த சிறுமியை திலகர் தாக்கியுள்ளார். பின்னர் அந்த சிறுமியை 2 பேரும் கடத்தி சென்று அங்குள்ள கோவிலுக்கு பின்னால் கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமியை 2 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி சென்றனர். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார், உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.
 
கடலூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு
 
இது பற்றி அவரது தாய் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திலகர், ஜெயசங்கர் ஆகிய 2 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் சிறுமியை தாக்கிய திலகருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 1000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும், சிறுமியை கடத்திச்சென்ற குற்றத்திற்காக திலகர், ஜெயசங்கருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறினார்.
 
கடலூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு
 
இது தவிர சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 2 பேரும் சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகை கொடுத்து, ஈடு செய்ய முடியாது என்றாலும், அவர் தன்னிச்சையாக வாழ வழிவகை செய்யும் வகையில், 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர், மாநில அரசு திட்டங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget