மேலும் அறிய

கடலூர்: மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை - வாலிபருக்கு 10 ஆண்டு சிறை , நண்பர் விடுதலை..!

கடலூர்: கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.

கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிதம்பரம் நகர பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார் மகன் கலியபெருமாள் (வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த 2.12.2019 அன்று கலியபெருமாள், அந்த மாணவியை சாமியார்பேட்டையில் உள்ள தனது நண்பர் அய்யப்பன் (24) வீட்டுக்கு கடத்தி சென்றார். அப்போது அய்யப்பன் அவர்களது செலவுக்கு பணம் கொடுத்து, அவர்களை திருப்பூருக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்ற கலியபெருமாள் அந்த மாணவியை திருமணம் செய்து, வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.


கடலூர்: மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை - வாலிபருக்கு 10 ஆண்டு சிறை , நண்பர் விடுதலை..!

மேலும் அவர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவர்கள் 23.3.2020 அன்று சிதம்பரத்தில் உள்ள அய்யப்பனின் அத்தை வீட்டுக்கு வந்து தங்கியிருந்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சிதம்பரம் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கலியபெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த அய்யப்பன் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடுத்தனர்.

Cuddalore: A Youth Who Made A Woman Pregnant And Asked For Dowry Has Been Jailed For 10 Years | பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, திருமணத்துக்கு வரதட்சணை கேட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.  அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட கலியபெருமாளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அய்யப்பன் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு சமூக பாதுகாப்பு துறையின் சமூக நல நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

போக்சோ சட்டம் என்றால் என்ன?

போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது,  அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
Embed widget