மேலும் அறிய

மனைவி தற்கொலைக்கு காரணமான கணவனுக்கு 7 ஆண்டு சிறை

இவ்வழக்கில் ஆதிசங்கர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும்,  20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு

கடலூர், பண்ருட்டி அருகே பெரிய எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிபாலன் என்பவரின் மகன் ஆதிசங்கர் (24) இவர் வெல்டிங் தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ரசபுத்திரபாளையத்தை சேர்ந்த கலையரசி (21) என்பவருக்கும் கடந்த 11.9.2013 அன்று திருமணம் நடந்தது உள்ளது. திருமணமாகி 2 மாதங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த ஆதிசங்கர், அதன் பிறகு திடீரென மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து துன்புறுத்தி வந்து உள்ளார். இதற்கு இடையில் கர்ப்பமான அவருக்கு புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. முதலில் ஒரு முறை அந்த குழந்தையை பார்க்க சென்ற ஆதிசங்கர், அதன் பிறகு மனைவி, குழந்தையை பார்க்க மீண்டும் செல்லவில்லை.
 
மனைவி தற்கொலைக்கு காரணமான கணவனுக்கு 7 ஆண்டு சிறை
 
இதனால் ஆதிசங்கரின் மனைவி தனது தாய் வீட்டில் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில் மாமியார் வீட்டுக்கு சென்ற ஆதிசங்கர் இது பற்றி கேட்ட போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் கலையரசியை தாக்கி உள்ளார். பின்னர் இது பற்றி அவர் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து ஆதிசங்கர், கலையரசியை அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். கடந்த 17.10.2015 அன்று ஆதிசங்கர், கலையரசியிடம் ரூ.35 ஆயிரத்தை கொடுத்து, சிலிண்டர், அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் ரூ.2500 கொடுத்து மின்சாரம் அடுப்பு வாங்கி ஏமாற்றப்பட்டு உள்ளார். இதை அறிந்த ஆதிசங்கர், அவரிடம் கேட்ட போது, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் கலையரசியை தாக்கி, துன்புறுத்தி உள்ளார்.
 
மனைவி தற்கொலைக்கு காரணமான கணவனுக்கு 7 ஆண்டு சிறை
இதனால் மனவேதனை அடைந்த கலையரசி வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி பண்ருட்டி காவல் நிலையத்தில் அவரது தாய் தட்சாயினி புகார் செய்தார். அதன்பேரில் துன்புறுத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ஆதிசங்கரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் ஆதிசங்கர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும்,  20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வளர்மதி ஆஜராகி வாதாடினார்.

தலைப்பு செய்திகள்

நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு !! வீட்டில் சோதனை - மேலும் திடுக்கிடும் தகவல்கள்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Embed widget