மேலும் அறிய
Advertisement
நாளை நிச்சயதார்த்தம்...காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்...பெற்றோர் எடுத்த விபரீத முடிவு..!
சிதம்பரம் அருகே திருமணம் நிச்சயம் செய்ய இருந்த மகள் காதலனுடன் சென்றதால் தாய் தந்தை இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்- போலீசார் விசாரணை
சிதம்பரம் அருகே திருமணம் நிச்சயம் செய்ய இருந்த மகள் காதலனுடன் சென்றதால் தாய், தந்தை இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வேலங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (65), தனது மனைவி சுமதியுடன் வயலில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த புதுச்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சுந்தரமூர்த்தி மகள் புஷ்பரோகினி ( வயது 19) சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வேதியியல் படித்து வருகிறார். இவருக்கு நாளை பெரியாண்டிக்குழி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு சென்ற புஷ்ப ரோகினி தான் ஏற்கனவே காதலித்து வந்த வேலங்கிப்பட்டு சேர்ந்த பால்ராஜ் என்பவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. கல்லூரி செல்வதாக சொல்லி விட்டு சென்ற மகள் வீடு திரும்பாத நிலையில் மகளை பல இடங்களில் தேடி உள்ளனர் விசாரித்து பார்த்ததில் மகள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தாய், தந்தை இருவரும் நேற்று காலை வேலங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த
சேகர் என்பவரின் வயலில் நெல்லுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து இறந்து விட்டனர். அவரது மகன் சந்திரசேகரன் என்பவர் அம்மா, அப்பாவை காணவில்லை என்று தேடிச் சென்றபோது இருவரும் இறந்த நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், சடலத்தை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர். காதலனுடன் சென்ற மகளால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion