மேலும் அறிய
Advertisement
திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை ஏமாற்றிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
’’பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசின் ஏதாவது ஒரு திட்டத்திலிருந்து 30 நாட்களுக்குள் 5 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு’’
கடலூர், விருத்தாசலம் அருகே உள்ள தீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்பவரின் மகன் சதீஷ்குமார் (31). இவருக்கும் விருத்தாசலத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமிக்கும் செல்போனில் மிஸ்டு கால் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. போகப் போக இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. அந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சிறுமியின் பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் சதீஷ்குமார் அங்கு சென்று அடிக்கடி சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இதற்கிடையே சிறுமியின் காதல் விவகாரம் பற்றி அறிந்த பெற்றோர் அந்த சிறுமியை கண்டித்தனர். இதில் மனமுடைந்த அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர் பின் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகும் இருவரும் காதலித்து வந்தனர். மேலும் சதீஷ்குமார் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 27.5.2016 அன்று சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்று சிறுமிக்கு, சதீஷ்குமாருடன் திருமணம் செய்து வைப்பது குறித்து பேசியுள்ளனர்.
அதற்கு சுப்ரமணியம் மற்றும் அவரது உறவினர்கள், சிறுமியின் உறவினர்களை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து வீட்டை விட்டு அனுப்பியுள்ளனர். இதுபற்றி சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், சதீஷ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசின் ஏதாவது ஒரு திட்டத்திலிருந்து 30 நாட்களுக்குள் 5 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாச்செல்வி ஆஜராகி வாதாடினார். கடந்த சில வாரங்களாக கடலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல பழைய வழக்குகள் விசாரிக்கப்பட்டு உடனடியாக தீர்ப்பு வழங்கி வருகின்றனர் இது வரவேற்கக் கூடிய செயல் என பலரும் அதனை பாராட்டி வருகின்றனர். சென்ற வாரம் தமிழகத்தையே உலுக்கிய கண்ணகி முருகேசன் கொலை வழிக்கிர்க்கு தீர்ப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion