மேலும் அறிய

தின்பண்டம் வாங்கிய குழந்தைகள்... மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த தாயின் இரண்டாவது கணவர்!

காவல்கிணற்றில் தின்பண்டம் திருடியதாக 10 வயது சிறுமி உட்பட 3 குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கொடூரம்,, தாயின் இரண்டாவது கணவன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

காவல்கிணற்றில் தின்பண்டம் திருடியதாக 10 வயது சிறுமி உட்பட 3  குழந்தைகள்  மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கொடூரம், ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதி, தாயின் இரண்டாவது கணவன் மீது  4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு



தின்பண்டம் வாங்கிய குழந்தைகள்... மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த தாயின் இரண்டாவது கணவர்!

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோட்டை சேர்ந்தவர் சுஜா, இவருக்கும்  குருநாதன் என்பவருக்கு திருமணமாகி கடந்த 11 ஆண்டுக்கு முன்பு 3  குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில்  கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குருநாதன் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக  கூறப்படுகிறது. பின்னர் 3 ஆண்டுகளாக குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து உள்ளார். இதனை தொடர்ந்து புரோக்கர் ஒருவரின் மூலம் சுஜா  கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டினத்தை சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை இரண்டாவதாக கடந்த 5 வருடத்திற்கு முன் திருமணம் செய்துள்ளார். அவர்கள் இருவரும் குழந்தைகளுடன் காவல் கிணற்றில் உள்ள பாரதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்..  சுஜா தனது இரண்டாவது கணவர் ஜேசு அந்தோணிராஜ்வுடன்  காவல்கிணற்றில் உள்ள தனியார் ஹோட்டலில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்... இந்த நிலையில் நேற்று முன்தினம் 2  குழந்தைகளான மாதேஷ், மகேஸ்வரி ஆகியோர் தின்பண்டம் வாங்க காவல்கிணற்றில் உள்ள  பேக்கரிக்கு  சென்றுள்ளனர். அவர்கள் அடிக்கடி அந்த கடையில் தின்பண்டம் வாங்கி திண்பது  வழக்கம் என கூறப்படுகிறது,  அதே போல நேற்றும் 2 குழந்தைகளும் கடையில் தின்பண்டம் வாங்கி விட்டு அதற்கு சென்று உள்ளனர், அவர்கள் வாங்கிய தின்பண்டத்திற்கு பணம் கொடுக்கவில்லை என்று சுஜாவின் இரண்டாவது கணவர் ஜேசு அந்தோணிராஜியிடம் கடை ஊழியர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜேசு அந்தோணிராஜ் கோபத்துடன் வீட்டிற்கு வந்து உள்ளார், பின்னர் 3 குழந்தைகளை கூப்பிட்டு விசாரித்து கோபத்தில் அடித்து உள்ளார், மேலும்  ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து 3 குழந்தைகள் மீதும் ஊற்றி தீ  வைத்துள்ளார்.


தின்பண்டம் வாங்கிய குழந்தைகள்... மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த தாயின் இரண்டாவது கணவர்!

இதில் மாதேஷ், மகராசி ஆகிய  இருவரும் தப்பித்து ஓடிவிட்டனர் . 10 வயது சிறுமி மகேஸ்வரி மட்டும் தீயில் சிக்கி கொண்டார். தீயில் சிக்கிய அச்சிறுமி தனது தந்தையிடம்  காப்பாற்ற வேண்டி கூறி உள்ளார். தீ வைத்து கொளுத்திய  கொடூரனிடமே மன்றாடிய நிலையில் அதற்குள் சிறுமியின்  உடல் முழுவதும் தீ பரவியது.  பின் சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு  கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு 90% தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தோணிராஜிக்கும் லேசான தீ காயம் ஏற்பட்டதால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து  ஜேசு அந்தோணி ராஜின் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பணகுடி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறக்கமின்றி ஒன்றுமறியா குழந்தைகள் மீது தீ வைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget