Crime : மும்பையில் அடுத்தடுத்து அதிர்ச்சி...பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த செப்டா டெலிவரி ஊழியர்....
மும்பையில் செப்டோ டெலிவரி ஊழியர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை: காரின் மேற்கு புறநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் ஒரு இளம் பெண் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக 'செப்டோ' என்ற ஆப் மூலம் ஆர்டர் செய்தார். சில மணி நேரம் ஆர்டரை கொடுப்பதற்காக வந்தார் செப்டோ ஊழியர். அப்போது ஆர்டரை கொடுத்துவிட்டு அந்த பெண்ணை புகைப்படம், வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார்.
இதனை அறிந்த அந்த பெண் அந்த செல்போனை வாங்கினார். பின்பு இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டின் கதவுக்கு வெளியே நின்று கொண்டிருந்த செப்டோ ஊழியர் தீடிரென உள்ளே வந்து, அந்த பெண்ணை தாக்கிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த பெண் சத்தம் போட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டெலிவரி ஊழியரை கைது செய்து விசாரணை நடத்தினர். அண்டைதானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஷாஜேட் ஷேக் என்பவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் அளித்தார்.
View this post on Instagram
அதற்கு செப்டோ நிறுவனம் பதிலளித்துள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவருக்கு உரிய தண்டனை கிடைக்கப்படும் என்று செப்டோ நிறுவனம் கூறியுள்ளது. மும்பையில் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட மும்பையில் தென்கொரியாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர், மும்பையின் தெருக்களில் நேரலை வீடியோ பதிவிட்டுக்கொண்டிருந்த போது வாலிபர்கள் இருவர் அந்த கொரியப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றது யூட்யூபிலும் ட்விட்டரிலும் வைரலாகிய நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க
" வேற மாதிரி மாறிடும்" சவால் விட்ட குட்டி ரவுடி.. நண்பர்களை தட்டி தூக்கிய போலீஸ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

