Crime: கரூரில் சொத்துப் பிரச்னையால் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - போலீஸ் விசாரணை
இளமுருகன் என்கின்ற கார்த்தியை இளைஞர்கள் 2 பேர் கடையினுள் புகுந்து அரிவாளால் வெட்டினர்.
![Crime: கரூரில் சொத்துப் பிரச்னையால் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - போலீஸ் விசாரணை Crime: Youth cut with sickle due to property dispute in Karur Police investigation TNN Crime: கரூரில் சொத்துப் பிரச்னையால் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - போலீஸ் விசாரணை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/b4da844f2e6dfb53ed8c214146b6a8811670327941910183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூரில் சொத்துப் பிரச்னை காரணமாக இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு கரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாநகரில் திருவிக சாலையில் வசிப்பவர் ஜோதி லிங்கம். இவரது மகன் இளமுருகன் என்கின்ற கார்த்தி (வயது 34). திருமணமாகிய இவர் மனைவியுடன் சேர்ந்து துணி மற்றும் ரெடிமேட் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மாலையில் கணவன், மனைவி இருவரும் கடையினுள் அமர்ந்திருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த பங்காளி வீட்டு இளைஞர்கள் 2 பேர் கடையினுள் புகுந்து கார்த்தியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.
கை மற்றும் முதுகு பகுதியில் வெட்டுக் காயங்களுடன் வெளியில் வந்த கார்த்தி அவர்களை பிடிக்க முயன்றபோது தப்பியோடி விட்டனர். இதனை தொடர்ந்து கார்த்தியை அருகில் இருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த மாநகர காவல்நிலைய போலீசார் அருகில் உள்ள கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களது குடும்பத்திற்கும், இவர்களது பங்காளி வீட்டிற்கும் 2 தலைமுறைகளாக சொத்துப் பிரச்னை இருந்து வருவதாகவும், அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்களின் உத்தரவுப்படி,
கரூர் மாவட்டம் முழுவதும் ஆதரவின்றி சுற்றி தெரியும் வயது முதிர்ந்தோர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் பேருந்து நிலையம், கடைவீதிகள், டிராபிக் சிக்னல், கோவில்கள், போன்ற இடங்களில் உணவு தேவைக்காக பிச்சை எடுத்து இருப்பிடம் இன்றி சுற்று தெரியும் நபர்களை கண்டறிந்து அவர்களின் புது வாழ்விற்காக காப்பகங்களுக்கு அழைத்துச் சென்று ஆதரவளித்து பாதுகாக்க வேண்டி கரூர் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், குழுத்தலை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,ஊரக உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அவர்கள் கண்காணிப்பில் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து 3, 4 ஆகிய தேதிகளில் 19 நபர்களை கண்டறிந்து அவர்களின் புது வாழ்விற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதைப்போல் அரவக்குறிச்சி காவல் நிலைய சரகம் மலைக்கோவிலூர் அருகே உள்ள தகரக்கொட்டை நாகம்பள்ளி பிரிவு அருகில் உள்ள இடத்தில் வயதான முதியவர் ஒருவரை வைத்து சித்தர் சாமி என பொய்யான தகவலை பரப்பி தனி நபர்கள் பணம் சம்பாதித்து வருவதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேற்படி வயதான முதியவரை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மீட்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்சமயம் ஆரோக்கியமாக உள்ளார். மேற்படி சுற்றி தெரியும் நபர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன், பொய்யான தகவல்களை பரப்பி வரும் நபர்கள் மற்றும் பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிக்கும் நபர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கைப்பேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)