மேலும் அறிய
Advertisement
சென்னை: ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலையா? காதலனிடம் விசாரணை..! நடந்தது என்ன?
" எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் புதிய செல்போன் வாங்கிக் கொடுத்து இன்ஸ்டாகிராம் காதலை வளர்த்த காதலன்"
சென்னை பல்லாவரம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன் (44). இவரது மனைவி விமலா (40). இவர்களின் மூத்த மகள் ஹேமிதா (19). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஹேமிதா அதே பகுதியில் உள்ள டியூஷன் சென்டரில் சிறு வயதிலிருந்து படித்து வந்துள்ளார். பள்ளி படிக்கும்போது டியூஷன் மாஸ்டர் அஜய் ( 26) என்பருக்கும் ஹேமிதாக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர படிக்கும் வயதில் காதல் எதற்கு என ஹேமிதாவை கண்டித்துள்ளனர். அதன் பிறகு ஒரு சில மாதங்களாக இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகின்றது.
பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு சென்று கொண்டு இருக்கும் போது, மீண்டும் அஜய் ஹேமாவும் நேரில் சந்தித்து தனது காதலை தொடர்ந்து கொண்டிருந்துள்ளனர். ஹேமிதா பயன்படுத்தி இருந்த செல்போனையும், அவரின் பெற்றோர் வாங்கிக் கொண்டதால் இருவரும் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தன் காதலிக்கு புதியதாக செல்போனை வாங்கி கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி இருவரும் காதலை வளர்த்து வந்துள்ளனர். வழக்கம்போல் கடந்த 27- ஆம் தேதி ஹேமிதா வீட்டில் அனைவரும் தூங்கி உள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது ஹேமிதாவை காணவில்லை. உடனே அக்கம் பக்கத்தினர் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தன் மகளை காணவில்லை என பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையம் மற்றும் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து தேடி வந்தனர். அப்பொழுது தாம்பரம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே இளம் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு சென்று அங்க அடையாளங்களை பார்த்த போது காணாமல் போன ஹேமிதாவின் உடல் என தெரியவந்தது. அதன் பிறகு உடலை மீட்ட ரயில்வே, போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பல்லாவரம் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஹேமிதா வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது 28-ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வந்து 2 கிலோமீட்டர் தூரம் உள்ள குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே திருநெல்வேலியில் இருந்து எக்மோர் நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ஹேமிதா இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹேமிதாவை காதலித்து வந்த அஜய் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பல்லாவரம் காவல் நிலையம் அழைத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் யாருக்கும் தெரியாமல் அதிகாலை நான்கு மணிக்கு எதற்காக வெளியே வந்தார் ? என பல கோணத்தில் பல்லாவரம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
Suicidal Trigger Warning.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion