Crime | தாயை கொலை செய்துவிட்டு பிணத்துடன் உறங்கிய மகன்! முதுகுளத்தூர் அருகே பயங்கரம்..
Crime | தாய் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்துவிட்டு சடலத்துடன் விடியும்வரை காத்திருந்த மகன்
![Crime | தாயை கொலை செய்துவிட்டு பிணத்துடன் உறங்கிய மகன்! முதுகுளத்தூர் அருகே பயங்கரம்.. Crime The son who killed his mother and slept with the corpse in Ramanathapuram Crime | தாயை கொலை செய்துவிட்டு பிணத்துடன் உறங்கிய மகன்! முதுகுளத்தூர் அருகே பயங்கரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/16/aa259e1c8dc2830e5308babf7a811373_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
"தாயை கொலை செய்து பிணத்துடன் உறங்கிய மகன்! முதுகுளத்தூர் அருகே பயங்கரம்"..!
தாய் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்து விட்டு சடலத்துடன் விடியும்வரை காத்திருந்த மகன் செய்த காரியத்தால் முதுகுளத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் தனது தாயை கொலை செய்ததாக தானே போலீசில் சரண் அடைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு இளைஞர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கீழக்கன்னிசேரி கிராமத்தில் தனது தாயார் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இரவில் கழுத்தை நெரித்து கொலை செய்த மகன் இரவு வரை தாயின் உடலின் அருகிலே விடிய விடிய காத்திருந்து விடிந்ததும் காலையில் முதுகுளத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று சரனடைந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முதுகுளத்தூர் அருகே கீழக்கன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி 'மங்கையர்கரசு' தற்போது வெளியூரில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி அமுதா (வயது 42) இந்த நிலையில், அமுதாவின் மூத்தமகன் இளைஞர் உதயகுமார் (26 வயது) தாய், மகன் ஆகியோருக்கிடையே அடிக்கடி அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வருவது வாடிக்கையாக இருந்துள்ளது. இந்த நிலையில், உதயகுமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உனது தாயார் அமுதா அக்கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு உள்ளதாக கூறியுள்ளனர். இதையடுத்து, தாயார் அமுதாவை மகன் உதயகுமார் பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து, தாயாரின் வயதுக்கு மீறிய தவறான நடத்தையால் ஏற்பட்ட அவமானத்தால் ஆத்திரமடைந்த மகன் உதயகுமார் தாயார் அமுதாவை சம்பவத்தன்று தூங்கும்போது, கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவர் இறந்ததை உறுதி செய்துவிட்டு அவர் தாயாரின் உடலின் அருகே இரவு முழுவதும் காத்திருந்து பின்னர் காலையில் எழுந்து முதுகுளத்தூர் காவல் நிலையம் சென்று அங்கு சரணடைந்தார். சரணடைந்த அவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், தனது தாயார் வேறொரு ஆணுடன் தகாத உறவு வைத்திருந்ததை தான் கண்டித்தும் கேட்காததால் ஆத்திரமடைந்த நான் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணையின்போது கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, தாயாரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட உதயகுமார் முதுகுளத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் இளைஞரிடம் சொன்னதை நம்பி தாயார் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை கொலை செய்துவிட்டு விடிய விடிய பிணத்தின் அருகே உறங்கிய இளைஞர் காலையில் சென்று காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)