மேலும் அறிய

Crime: தாய்மாமன் மகனை காதலித்து திருமணம் செய்த மகள்: ஆத்திரத்தில் அண்ணனை போட்டுத்தள்ள முயன்ற தங்கை

Crime: மகளை காதலித்து திருமணம் செய்த விவகாரத்தில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தங்கையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Crime: மகளை காதலித்து திருமணம் செய்த விவகாரத்தில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தங்கையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

தமிழ்நாடோ ஒட்டுமொத்த இந்தியாவோ இங்கு இருக்கும் ஒரு கலாச்சார பழக்கமாக இருப்பது அண்ணன் தங்கை இருக்கும் வீடுகளில் பெரும்பாலும், தங்கையின் திருமணம் முடிந்த பின்னரே அண்ணனின் திருமணம் என்பதாக இருக்கிறது. தங்கையின் திருமணத்தினை முடித்து விட்டு, அதற்காக வாங்கிய கடன்களை அடைத்துவிட்டுத்தான் அண்ணன்கள் திருமணம் என்பது, இந்த சமூகம் ஒரு வழக்கமாகவே மாற்றிவிட்டது. தங்கையின் திருமணம் முடிந்து அண்ணனுக்கு திருமணம் என பெண் தேடுகையில் மீண்டும் இந்த சமூகம், வயதாகிவிட்டது, இவ்வளவு வயதில் மூத்தவருக்கு எப்படி எங்களது மகளை திருமணம் செய்து வைப்பது என கேள்வி எழுப்புகிறது. 

இறுதியில் மிகவும் நெருங்கிய உறவுகளே தங்கள் வீட்டுப் பெண்ணைவிடவும் வயது முதிர்ந்த ஆணுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். ஒரு சில இடங்களில் அந்த ஆண்களுக்கு திருமணம் என்பதே இல்லாமல் போகிறது. உறவுக்காரர்களால் செய்து வைக்கப்படும் திருமணத்தில், தம்பதியனருக்கு இடையில் மிகவும் வயது வித்தியாசம் உள்ளதால் மனக்கசப்பு மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இன்னல் மிக்க வாழ்வையும் வாழ்ந்து வருவதென்பது இங்கு மிகவும் எதார்த்தமாகிவிட்டது. 

ஆனால், மேற்குறிப்பிட்டது தொடர்பாக சென்னையில் நடந்துள்ள சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. வியாசர்பாடியில் உள்ள 12வது தெருவில் உள்ள சென்ரல் அவன்யூவில் குடியிருப்பவர் மருது பாண்டி(58) மற்றும் அவரது மகன் மணிகண்டன் (32). மருது பாண்டியின் சகோதரி அமிரதம் இளையான்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ஷாலினியும் மணிகண்டனும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் அந்த காதலுக்கு ஷாலினியின் தாயார் எதிர்ப்பு தெரிவித்தே வந்துள்ளார். இருப்பினும் தாயின் எதிர்ப்பை மீறி ஷாலினி தனது தாய்மாமன் மகனான மணிகண்டனுடன் தனது காதலை தொடர்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 8ம் தேதி மணிகண்டனும் ஷாலினியும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்து, காதல் திருமணம் செய்துள்ளனர். இதன் பின்னர், ஷாலினியின் தாயார் அமிர்தம் தனது ஊரில் இருந்து நான்கு பேரை அழைத்து கொண்டு நேற்று முந்தினம் இரவு அதாவது கடந்த 9ம் தேதி இரவு சென்னையில் உள்ள தனது அண்ணனின் வீட்டிற்கு வந்துள்ளார். வந்தவர் தனது மகள் ஷாலினியை என்னுடன் அனுப்பி வைக்குமாறு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடக்கத்தில் வாக்குவாதமாக இருந்தது, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது அமிர்தம் அழைத்துவந்த நபர் ஒருவர் தான் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து மருது பாண்டியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். வெட்டுப்பட்ட மருத பாண்டிக்கு அதிகப்படியான ரத்தம் வரவே உடனே ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அமிர்தம் மற்றும் அவருடன் வந்த நான்கு நபர்களும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. 

இந்த விவகாரம் தொடர்பாக மருது பாண்டி எம்.கெ.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரினை அடுத்து வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வரும் எம்.கே.பி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பேதகர் தலைமறைவான அமிர்தம் மற்றும் அவருடன் வந்த நான்கு பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
Kaliammal: தளபதிக்கே தளபதியாக மாறப்போகும் காளியம்மாள்? தவெக-வில் இணைவது எப்போது?
Kaliammal: தளபதிக்கே தளபதியாக மாறப்போகும் காளியம்மாள்? தவெக-வில் இணைவது எப்போது?
TRB Notification: பேராசிரியர் போட்டித் தேர்வுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்; ஆனால்.. டிஆர்பி வைத்த செக்!
TRB Notification: பேராசிரியர் போட்டித் தேர்வுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்; ஆனால்.. டிஆர்பி வைத்த செக்!
Embed widget