Crime : காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்... வீடு புகுந்து இளம்பெண்ணை கொன்று இளைஞர் தற்கொலை... என்ன நடந்தது...?
காதலை ஏற்க மறுத்ததால் கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : காதலை ஏற்க மறுத்ததால் கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, பெண்ணுக்கு தெரிந்த நபர்களாலேயேதான் தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஒருதலைக் காதலால் விபரீதம்
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் குகனூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் பஜந்திரி (19). இவர் பலகேரி பகுதியில் வசித்து வரும் சுமா என்ற 18 வயதுடைய பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருமே கல்லூரியில் படித்து வருகின்றனர். பிரகாஷ் பஜந்திரி, சுமாவிடன் தனது காதலை தெரிவித்துள்ளார். வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அவரை காதலித்தால் பிரச்சனை வரும் என்று நினைத்து, காதலனை ஏற்க மறுத்துள்ளார்.
ஆனால் தன்னை காதலிக்குமாறு சுமாவை, பிரகாஷ் வற்புறுத்தி வந்நததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று காலை சுமாவின் வீட்டில் அவரது பெற்றோர்கள் திருவிழாவுக்கு சென்றிருந்தனர். சுமா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த பிரகாஷ் அவரது வீட்டிற்கு வந்துள்ளளார்.
கொலை - தற்கொலை
பின்னர், சுமாவின் வீட்டிற்குள் புகுந்த பிரகாஷ், மீண்டும் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. காதலை ஏற்க மறுத்த சுமா, தன்னை தொல்லை செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரகாஷ் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சுமாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சுமா உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து, பிரகாஷ் தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
.





















