Crime: காதலியுடன் ஜாலி பண்ண பைக் களவில் ஈடுபட்டு கம்பி எண்ணும் 21 வயது இளைஞன்..! அதிர்ச்சி பின்னணி!
இரு சக்கர வாகனத்தை திருடுவதற்கு இவருக்கு உதவியாக இருந்த சஜிக் என்கிற சஜித் கல்மானி, அமன் பரே ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தனது காதலியுடன் ஜாலியாக ஊர் சுற்றுவதற்காக நாக்பூரை சேர்ந்த 21 வயது இளைஞர், பைக் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரை சேர்ந்த 21 வயதான இளைஞரான அஜய் சர்வான் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். தன் காதலியுடன் ஜாலியாக ஊர் சுற்றுவதற்கும், டேட்டிங் மற்றும் செலவழிப்பதற்காக இரு சக்கர வாகனங்களை திருடி சென்றுள்ளார்.
இந்தநிலையில், இரு சக்கர வாகனத்தை திருடுவதற்கு இவருக்கு உதவியாக இருந்த சஜிக் என்கிற சஜித் கல்மானி, அமன் பரே ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சர்வான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஹி பகுதியில் தனது காதலியை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது. இவருடன் 19 வயதான அமன் பரேவும் சென்றுள்ளார். இருவரும் பேருந்தில் குஹிக்கு சென்ற நிலையில், திரும்பி வரும்போது, சர்வானும் பரேயும் இரண்டு பைக்குகளை திருடி சென்றனர்.
அதிகரித்த பைக் திருட்டுகள்:
இதைதொடர்ந்து, சக்கர்தாராவில் உள்ள மருத்துவ மாணவர்களுக்கான விடுதியில் பணிபுருந்த பரே, டிபன் டெலிவரி செய்யும் கல்மணியுடன் நீண்ட நாட்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவரும் இணைந்து இருசக்கர வாகனங்களை திருட தொடங்கியுள்ளனர். தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் இருசக்கர வாகனங்களையும் திருடியுள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கை தீவிரமாக கையில் எடுத்த மூத்த காவல்துறை அதிகாரிகள் திருட்டு வழக்கில் இவர்களை கைது செய்து, பைக்குகளை மீட்டுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இவர்கள் பிடிபடுவதற்கு முன்பு, பரேயும் அவர்களது நண்பர்களும் அந்த பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் பைக்குகளை அதிகம் திருடியுள்ளனர். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ ஒரு குறிப்பிட்ட ஆட்டோமொபைல் நிறுவனத்தில் இருந்த பைக்குகளை இந்த கும்பல் திருடியுள்ளது. மின் இணைப்புகளை கட் செய்துவிட்டு எப்படி பைக்குகளை திருட வேண்டும் என்று இந்த கும்பலுக்கு நன்றாக தெரிந்துள்ளது.” என்று தெரிவித்தார்.
முதலில் பிடிபட்டவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பரே. இவரிடம் இருந்து பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்ற நபர்களின் பெயரை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், இவர்களிடம் இருந்து பெல்தரோடி பகுதியில் இருந்து திருடப்பட்ட ஒரு பைக்குகள், யசோதரா நகரில் இருந்து திருடப்பட்ட 4 பைகுகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.