Crime: பேஸ்புக் லைவ்வில் முன்னாள் காதலி தலையில் கல்லைப் போட்டு கொலை..! நடந்தது என்ன?
தருமபுரியைச் சேர்ந்த நபர், தனது முன்னாள் காதலி மீது கல்லை போட்டு கொலை செய்து முகநூலில் நேரலையில் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Crime : தருமபுரியைச் சேர்ந்த நபர் தனது முன்னாள் காதலி மீது கல்லை போட்டு கொலை செய்து முகநூலில் நேரலையில் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் லைவ்வில் கொலை:
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனுா் தாலுகா மலை மாதேஸ்வரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகமரைச் பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ். பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த 35 வயதான லட்சுமி என்ற தனது முன்னாள் காதலியை கொலை கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
கொலை செய்ததை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தார். அதில், "என்னை கொலைகாரனாக ஆக்கிட்டியே லட்சுமி, போயிட்டியா, அந்த ஈஸ்வரன் என்ன கொலை செய்ய அனுப்பி வைத்துவிட்டான். நீ இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கொலை செய்ய வைச்சுட்டான்" என்றார். மேலும், "பாருங்க இந்த கல்லைத் தூக்கி போட்டு தான் கொலை செய்தேன். நான் தான் கொலை செய்தேன்" என்று ஆவேசமாக கத்தி பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார்.
பின்னர், அங்கிருந்த மரம் ஒன்றில் முனிராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொலை குறித்து தகவல் அறிந்த மலை மாதேஸ்வரா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். லட்சுமியின் கணவா் ரமேஷ் வெளியூா் சென்றிந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க