Crime : திருமணம் நின்றதால் சோகம்... மனமுடைந்து தற்கொலை செய்த கொண்ட இளைஞர்...என்ன நடந்தது?
பெங்களூருவில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
Crime : பெங்களூருவில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் மாகடியில் உள்ள திப்பசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார்(29). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மாகடி சாலையில் உள்ள ஹோசபாலியாவ் பகுதியை சேர்ந்த காவ்யாஸ்ரீ என்ற பெண்ணுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் செய்ய அவரவர் உறவினர்கள் முடிவு செய்தனர். இதனால் கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு காவ்யாஸ்ரீ படிப்பைத் தொடர மோகன் குமாரின் குடும்பத்தினர் அனுமதிப்பதாகவும், அவரின் படிப்பு செலவு அனைத்தையும் தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் கூறினர். திருமண ஏற்பாடுகளுக்காக அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், காவ்யாஸ்ரீயின் குடும்பத்தினருக்கு குமாரைப் பற்றி அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு குமாரை பற்றிய சில வதந்திகள் தெரியவந்தது. இதனால், குமாரை வீட்டிற்கு வரவழைத்து திருமணம் நடத்த தங்களுக்கு விருப்பம் இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்பு, மோகன் குமார் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். இதனை காவ்யாஸ்ரீயின் குடும்பத்தினர் தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் பிரச்சினையை தீர்ப்பதற்காக குமார் மற்றும் அவரது பெற்றோர், காவ்யாஸ்ரீயின் வீட்டிற்கு சென்றனர். அப்போது மோகனின் குடும்பத்தினரை அவமானப்படுத்தியதாகவும் வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியே தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் குமாரை தனியாக காவ்யாஸ்ரீயின் வீட்டிற்கு அவரது பெற்றோர்கள் வர அழைத்தனர். அப்போது, காவ்யாஸ்ரீயை தொந்தரவு செய்ய முயன்றால் கொன்று விடுவோம் என்று அவரது பெற்றோர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், தகாத வார்த்தைகளால் காவ்யாஸ்ரீ பெற்றோர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு மனமுடைந்த குமார் தனது வீட்டிற்கு புறப்பட்டார்.
இதையடுத்து, அதிகாலை 3.30 மணியளவில் அவர் தனது பணிக்கு புறப்பட்டார். சுமார் நான்கு மணி நேரம் கழித்து, மாகடி சாலையில் உள்ள காவ்யாஸ்ரீ வீட்டிற்கு அருகில் சென்று தற்கொலை செய்து கொண்டார். அவமானம் மற்றும் திருமணம் ரத்து செய்யப்பட்டதால் மனமுடைந்த குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து, காவ்யாஸ்ரீ, அவரது தாயார் வரலக்ஷ்மம்மா மற்றும் ஜெயராமையா ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக குமாரின் தந்தை ரங்கஸ்வாமையா (60) புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050