மேலும் அறிய

Crime: முண்டம் எங்கே? துண்டாக எடுத்துச் செல்லப்பட்ட தலை...சகோதரி காதலித்ததால் இளைஞர் வெறிச்செயல்...ஷாக் வீடியோ!

உத்தர பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் வெட்டப்பட்ட தலையை கையில் எடுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: உத்தர பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் வெட்டப்பட்ட தலையை கையில் எடுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது கூட மணிப்பூரில் குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்கைளை  ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.  இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. 

காதல் விவகாரம்:

உத்தர பிரதேச மாநிலம் பாரபங்க மாவட்டம் ஃபதேபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரியாஸ். இவரது சகோதரி ஆஷிபா. இவர்கள் இருவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஆஷிபா என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் சந்த் பாபு என்பவருடன் பழக்கும் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம், ஆஷிபாவின் சகோதரர் ரியாஸ்க்கு தெரியவந்தது. இதனால், ஆஷிபாவை கண்டித்துள்ளார் ரியாஸ். இருப்பினும் அதனை கண்டு கொள்ளாத ஆஷிபா, மீண்டும் அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.  

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் ஆஷிபா வீட்டை விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து போலீசார், ஆஷிபாவை மீட்டு அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர். இருப்பினும், மீண்டும் ஆஷிபா, சந்த பாபுவை காதலித்து வந்துள்ளார்.

அக்காவை கொலை செய்த தம்பி:  

ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த ரியாஸ், அவரது சகோதரியான ஆஷிபாவிடன் சம்பவத்தன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் நீடித்த நிலையில், அவரது சகோதரி ஆஷிபாவை தலையை வெட்டிக் கொலை செய்துள்ளார். அதில் தலையை மட்டும் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர், ரத்த கறையுடன், தலை பாகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சாலையில் நடந்துச் சென்றுள்ளார் ரியாஸ். இதனை பார்த்து பீதியடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பகீர் வீடியோ:

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரியாஸை கைது செய்து அவர் கையில் வைத்திருந்த உடல் பாகத்தை கைப்பற்றினர். இதனை அடுத்து, ஆஷிபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், ரியாஸிடன் விசாரித்ததில் தனது அக்காவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், ரத்தக்கறையுடன் சாலையில் அந்த நபர் நடந்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அந்த இளைஞர் ரத்த கறையுடன் கையில் வெட்டப்பட்ட தலையை எடுத்துச் சென்றுள்ளது போன்று வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget