மேலும் அறிய

Crime: நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட நடிகை; நாடகமாடிய கணவர் கைது...! நடந்தது என்ன..?

மேற்கு வங்கத்தில் ஜார்க்கண்ட் நடிகை சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Crime : மேற்கு வங்கத்தில் வழிப்பறி கொள்ளையர்களால், ஜார்க்கண்ட்  நடிகை சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ரியா குமாரி. இவரது கணவர் பிரகாஷ் குமார். இவர் படத்தயாரிப்பாளர் ஆவார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் நேற்று காரில் மேற்கு வங்காளத்தின் தலைநகரமான கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பக்னன் காவல்நிலையத்திற்குட்பட்ட மகிஷ்ரேகா என்ற இடத்தில் அவர்களது காரை 3 பேர் கொண்ட மர்ம நபர்கள  மறித்தனர். பிரகாஷ் குமாரை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.  இதை அடுத்து, அவரது கணவரை ரியா குமாரி மீட்க முயற்சித்தார்.

நடிகை சுட்டுக்கொலை

அப்போது, ரியா குமாரியை கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர். பின்பு, ரத்த வெள்ளத்தில் கிடந்த ரியா குமாரியை அவரது கணவர் காரில் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தார்.  அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, நடிகை ரியா குமாரி தன் குடும்பத்தினருடன் ஹவுரா நெடுஞ்சாலையில் காரில் சென்ற போது, வழிமறித்த மூன்று கொள்ளையர்கள் ரியா குமாரியை சுட்டுக் கொலை செய்தனர். மேலும் ரியா குமாரியின் கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருவதாக தெரிவித்தனர்.

திடீர் திருப்பம்

ரியா குமாரி கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.  அப்போது ரியா குமாரின் குடும்பத்தினர் கணவரான பிரகாஷ் குமார் மீது சந்தேகம்  இருப்பதாக குற்றம்சாட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் குமாரியை துன்புறுத்தியதாக பிரகாஷ் குமார், அவரது முன்னாள் மனைவி, இரண்டு சகோதரர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.

போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்துள்ளதால், பிரகாஷ் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து பிரகாஷ் குமாரிடன் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க

Crime : இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை...டாக்சி ஓட்டுநர் உட்பட 2 பேர் செய்த கொடூரம்..

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget