Crime: தலைக்கேறிய கஞ்சா.. பட்டப்பகலில் நண்பனை நடுரோட்டில் கத்தியால் குத்திய இளைஞர்.. தி.மலையில் பரபரப்பு..!
திருவண்ணாமலை நகரப் பகுதியில் கஞ்சா போதையில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றி கழுத்தில் கத்தியால் குத்தியதால் ரத்த வெள்ளத்தில் சரிந்த இளைஞரால் பரபரப்பு.
திருவண்ணாமலை (Tiruvannamalai News) திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியான தேரடி வீதியில் வெங்கடேசன், பிரேம்குமார், சீனு, ஆகிய மூன்று பேர் கஞ்சா போதையில் சுற்றித் திரிந்துள்ளனர். அப்போது சாலையில் செல்லும் போதே இவர்கள் தகராறில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களை கண்ட பொதுமக்கள் போதை ஆசாமிகளால் எதற்கு நமக்கு பிரச்சினை என்ற எண்ணத்தில் பொதுமக்கள் ஒதுங்கி சென்றனர்.
கஞ்சா போதை:
பின்னர் வெங்கடேசன், பிரேம்குமார், சீனு, மூன்று பேருக்கும் போதை தலைக்கேற இவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி கோபுர தெருவை சேர்ந்த 28 வயதான பிரேம்குமாரை அவருடைய நண்பர்களான சீனு, மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி ஒருவர், அருகில் இருந்த பழக்கடையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் கத்தியால் குத்தியதாக சொல்லப்படுகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சி பொதுமக்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கத்திக்குத்து பட்ட பிரேம்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
வாலிபருக்கு கத்தி குத்து
இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நகர காவல்நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த நகர காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் இருந்த வாலிபரை 108 ஆம்புலன்ஸ் மூலம்க திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கத்தியால் குத்திவிட்டு அங்கு இருந்து தப்பி ஓட முயன்ற வெங்கடேசனை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.பின்னர் தலைமறைவான சீனுவை காவல்துறையினர் பொதுமக்களின் உதவியோடு அன்பு திரையரங்கம் அருகில் கைது செய்து நகர காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மது போதையில் இருந்த இரண்டு கஞ்சா போதை ஆசாமிகளை காவல்துறையினர் விசாரணை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வட்டாரத்தில் தெரிவிக்கையில்;
கத்திக் கொடுத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் திருவண்ணாமலை பேர் கோபுரத் தெருவை சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரிய வந்தது. போதையில் இரு ஆசாமிகள் பிரேம்குமாரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிய இரண்டு போதை ஆசாமைகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆன்மீக நகரில் அண்ணாமலையார் கோவிலின் அருகே கஞ்சா போதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றி பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கக்கூடிய நேரத்தில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இளைஞர் சரிந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.”