Crime : அடுத்த மாதம் திருமணம்: கடிதம் எழுதி வைத்துவிட்டு தனியார் நிறுவன பெண் அதிகாரி தற்கொலை....சென்னையில் அதிர்ச்சி...!
அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், தனியார் நிறுவன பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime : அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், தனியார் நிறுவன பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி (31). இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது. அவரது பெற்றோர்கள் திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு அவரது பெற்றோர்கள் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெயந்தியின் பெற்றோர்கள் திருமண அழைப்பிதழ் கொடுக்க வெளியே சென்றுவிட்டனர். ஜெயந்தியின் சகோதரர் கல்லூரிக்கு சென்றுவிட்டார். வீட்டில் ஜெயந்தி மட்டும் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கல்லூரி முடிந்து அவரது சகோதரர் மாலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டிற்கு வெளியே நின்று கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளே புடவையால் மின் விசிறியில் ஜெயந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், இதுகுறித்து அவரது பெற்றோருக்கும், போலீசாருக்கு ஜெயந்தியின் சசோதரர் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலீசார் ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, சேலையூர் போலீசார் அவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது ஜெயந்தி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அவர் "தனது இறப்புக்கு யாரும் காரணமில்லை" என்று மட்டும் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தற்கொலை செய்து கொண்ட ஜெயந்தி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலமாக நிலம் வாங்குவதற்காக வங்கியில் கடன் வாங்கி தவணை முறையில் பணத்தை கட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயந்தி தற்கொலை செய்து கெண்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க