Crime : விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்...மனைவி, மாமியார், 5 குழந்தைகள் சுட்டுக் கொலை... என்ன நடந்தது?
அமெரிக்காவில் விவாகரத்து கேட்ட ஆத்திரத்தில் மனைவி, மாமியார், 5 குழந்தைகளை கணவரே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : அமெரிக்காவில் விவாகரத்து கேட்ட ஆத்திரத்தில் மனைவி, மாமியார், 5 குழந்தைகளை கணவரே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரகேறி வருகிறது. அங்கு சதாரண மக்களும் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் உள்ளது. அவர்களில் விரக்தி அடையும் சிலர் கண்மூடித்தனமாக துப்பாக்கியை தவறாக பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், ஒருவர் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விவாகரத்து கோரியதால் ஆத்திரம்
அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உட்டா என்ற மாகாணம் உள்ளது. இங்கு ஈணாக் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 8,000 மக்கள் தொகை தான். இங்கு பெரும்பாலான மக்கள் விவசாய வேலை செய்து வருகின்றனர். இந்த பகுதியைச் சேர்ந்துவர் மைக்கேல் ஹெய்ட் (42). இவர் ஆயுள் காப்பீடு துறையில் முகவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தவுசா (40). மைக்கேல் ஹெய்டின் மாமியாருடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு 3 மகள்களும், 2 மகன்களும் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் 5 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் உட்டா நகரில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில், மைக்கேல் ஹெய்டுக்கும் இவரது மனைவி தவுசாவுக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தவுசா விவாகரத்து செய்ய முடிவு செய்தார். இதனால் தவுசா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சுட்டுக் கொலை
இதனை அடுத்து, கணவர் மைக்கேல் ஹெய்ட் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது, விவாகரத்து கேட்ட ஆத்திரத்தில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவி, மாமியார், 5 குழந்தைகளை சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் அவரும் தன்னைத் தானே சுட்டுக் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 8 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)




















