மேலும் அறிய

Crime: சேலம்: பிரபல ரவுடியை கடத்திச் சென்ற 20 பேர் கொண்ட கும்பல்: 5 பேர் கைது! - காரணம் என்ன?

நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரம், கடை மேலாளர் பாபு ஆகிய இருவரையும் கடந்த 4 ஆம் தேதி சேலம் அழகாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கோரிமேடு பிருந்தாவன் கார்டனை சேர்ந்தவர் பூபதி. பிரபல ரவுடியான இவர் கடந்த 2 ஆம் தேதி இரவு அழகாபுரத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தபோது கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 20 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக தாக்கி அவர்களை காரில் கடத்தி சென்றது. அப்போது சேலம் ஐந்து ரோடு பகுதிக்கு வந்த போது பிரவீன் குமார் காரிலிருந்து குதித்து தப்பினார். இதையடுத்து அழகாபுரம் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் பிரவீன் குமார், பூபதி ஆகிய இருவரை 20 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Crime: சேலம்: பிரபல ரவுடியை கடத்திச் சென்ற 20 பேர் கொண்ட கும்பல்: 5 பேர் கைது! - காரணம் என்ன?

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. கடத்தல் கும்பலை பிடிக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது பூபதியை காரில் கடத்திய கும்பல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே காவல்துறையினர் அங்கு விரைந்து சென்ற நிலையில் கடத்தல் கும்பல் நெருங்கியதை உணர்ந்து பூபதியையும், அவரது காரையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர். பின்னர் காவல்துறையினர் பூபதியை காருடன் மீட்டு வந்து சேலத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரத்திற்கு சொந்தமான நிலம் வீராணத்தில் உள்ளது. 

Crime: சேலம்: பிரபல ரவுடியை கடத்திச் சென்ற 20 பேர் கொண்ட கும்பல்: 5 பேர் கைது! - காரணம் என்ன?

அந்த நிலத்தின் மதிப்பு ரூபாய் 12 கோடி இந்த நிலத்தை விற்று தருவதாக கூறி நகைக் கடையின் உரிமையாளரிடமிருந்து அசல் பத்திரத்தை வாங்கி சென்றுள்ளார். ஆனால் நிலத்தை விற்று தராமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஏகாம்பரம் பத்திரத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பூபதி பத்திரத்தை தர மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏகாம்பரம் கூலிப்படையை வைத்து பூபதியை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. பூபதி கடத்திய கூலிப்படை அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. நகைக்கடை உரிமையாளர் ஏகாம்பரம், கடை மேலாளர் பாபு ஆகிய இருவரையும் கடந்த 4 ஆம் தேதி சேலம் அழகாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் பூபதியை கடத்திச் சென்ற கூலிப்படையை சேர்ந்த கௌதம், நவீன் குமார், பிரபாகரன் யுவராஜ் மற்றும் மணிமாறன் ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சிறுவனின் ரேஷன் கார்டு கோரிக்கை...2-வது மனைவியை கொடூரமாக கொன்று புதைத்த போலீஸ் - நடந்தது என்ன ?
சிறுவனின் ரேஷன் கார்டு கோரிக்கை...2-வது மனைவியை கொடூரமாக கொன்று புதைத்த போலீஸ் - நடந்தது என்ன ?
மனைவிக்கு 18.. கணவருக்கு 40... வயது வித்தியாசத்தால் தீராத சந்தேகம்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!
மனைவிக்கு 18.. கணவருக்கு 40... வயது வித்தியாசத்தால் தீராத சந்தேகம்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
நூடுல்ஸ் சாப்பிட்டதால் 5 பேர் உயிரிழப்பு.. திட்டமிட்ட தற்கொலையா? .. உ.பி.யை அதிர வைத்த சம்பவம்!
நூடுல்ஸ் சாப்பிட்டதால் 5 பேர் உயிரிழப்பு.. திட்டமிட்ட தற்கொலையா? .. உ.பி.யை அதிர வைத்த சம்பவம்!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Embed widget