Crime: செத்துப்போன மனிதம்..! காயங்களுடன் கீழே கிடந்த சிறுமி..! காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்.. பதைபதைக்கவைக்கும் வீடியோ
Crime: உத்தரபிரதேசத்தில் 12 வயது சிறுமி உடலில் காயங்களுடன் கிடந்ததை பார்த்த சிலர் வீடியோ எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: உத்தரபிரதேசத்தில் 12 வயது சிறுமி உடலில் காயங்களுடன் கிடந்ததை பார்த்த சக மனிதர்கள் காப்பாற்றாமல் வீடியோ எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் கன்னௌஜ் பகுதியில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கன்னௌஜ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு பின்னால் அந்த சிறுமி பலத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்துள்ளார்.
முகம், கை, காலில் காயங்களுடன் அந்த சிறுமி கிடந்தார். இந்நிலையில், அந்த சிறுமியை அப்பகுதி மக்கள் பார்க்க குவிந்தனர். பின்பு அந்த சிறுமி ரத்த காயங்களுடன் இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், சிறுமியை காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்தனர். ஆனால், அங்கு இருந்த ஒருவர் கூட சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயலவில்லை. அனைவரும் வீடியோ மட்டுமே எடுத்திருந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பின்பு அந்த பாதிக்கப்பட்ட சிறுமி தனது கையை உயர்த்தி உதவி கேட்டுள்ளார். ஆனால் அந்த சிறுமியை சுற்றி இருந்தவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த சிறுமியை தூக்கி கொண்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Warning: Disturbing video
— Piyush Rai (@Benarasiyaa) October 25, 2022
In UP's Kannauj, a 12-year-old girl who had stepped out in the market was later found dumped behind a guest house in a serious condition. A sub-inspector reached the spot upon alert and carried the little girl to hospital. pic.twitter.com/Fz3XyOkeZA
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நேற்று மதியம் வெளியே சென்ற சிறுமி மாலை வரை வீடு திரும்பவில்லை. தங்களுடைய உறவினர்கள் வீடு உள்பட அனைவரின் வீட்டிலும் தேடியும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுசம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
பின்பு சிறுமியின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் கான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்த சிறுமியை வன்கொடுமை செய்து தூக்கி வீசப்பட்டதாக அப்பகுதி போலீசாரிடம் தெரிவித்தனர். பின்பு, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது