மேலும் அறிய
Advertisement
Crime: கடலூரில் ஊராட்சி மன்ற தலைவர் கணவர் கொலை விவகாரம் -11 பேர் கைது
கடலூர் - விழுப்புரம் மாவட்ட எல்லை வழியாக தப்பிச்செல்ல முயன்ற 11 பேரை போலீசார் பிடித்து விசாரித்து கைது செய்தனர்.
கடலூரில் இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 11 பேரை காவல்துறையினர் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடலூர் குண்டு உப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் நேற்று முன்தினம் காலை மஞ்சக்குப்பம் சண்முகம் தெருவில் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஊராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோத தகராறில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்தது காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
கொலை சம்பவம் தொடர்பாக மதியழகன் மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில், கடலூர் புதுநகர் காவல் துறையினர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி உள்பட 24 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் DSP பிரபு மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் கடலூர் - விழுப்புரம் மாவட்ட எல்லை வழியாக தப்பிச்செல்ல முயன்ற 11 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதையடுத்து தாழங்குடாவை சேர்ந்த தினேஷ், விஜய், குருநாதன், மணிகண்டன், சரவணன், அர்ச்சுனன், ராஜவேல், ராஜேஷ், அந்தோணி செல்வம், ஆகாஷ்,வச்சலா ஆகிய 11 பேர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து கடலூர் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மீதமுள்ள மாசிலாமணி உள்பட 13 பேர்களை கடலூர் புதுநகர் காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion