மேலும் அறிய

கிரிக்கெட் சூதாட்டத்தில் AI தொழில்நுட்பம்; பந்தயத்தில் பல லட்சம் ரூபாய்... புதுச்சேரியில் பரபரப்பு

பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதி போட்டியின் போது நடந்த சூதாட்டத்தில், புதுச்சேரியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல லட்சம் ரூபாயை வென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் AI தொழில்நுட்பம் 

பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதி போட்டியின் போது நடந்த சூதாட்டத்தில், புதுச்சேரியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல லட்சம் ரூபாயை வென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22ம் தேதி துவங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், இறுதி போட்டி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடந்தது. இதுவரை கோப்பை வெல்லாத இரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி, கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போட்டியில், 17 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிரிக்கெட் சூதாட்டம்

இந்நிலையில், புதுச்சேரியில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிரிக்கெட் சூதாட்டம் நடந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் மோதிய ராயல் சேலஞ்சர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மீது, புதுச்சேரியில் உள்ள 'புக்கி'கள் எனப்படும் கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள், நேற்று முன்தினம் காலை முதலே கிரிக்கெட் ரசிகர்களை அணுகி பந்தயத் தொகையை சேகரிக்க துவங்கினர்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அணிகளின் முந்தைய ஆட்டங்களை அடிப்படையாக கொண்டே பந்தயம் கட்டுவது வழக்கம். ஆனால், நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில் 'புக்கி'களின் ஆலோசனைப்படி தங்களின் மொபைல் போன்களில் உள்ள செயற்கை நுண்ணறிவு (AI ) தளங்களில் எந்த அணி வெற்றி பெறும் என கேட்டு பந்தயத் தொகையை கட்டி உள்ளனர்.

ஒரே நேரத்தில் பல லட்சம் ரூபாய்க்கு பந்தய தொகை எகிறியது

அதில், அன்று மதியம் வரை பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெறும் என சில AI தளங்கள் கூறி வந்தன. மாலையில் திடீர் திருப்பமாக, ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெல்லும் என செயற்கை நுண்ணறிவு தளங்கள் தகவல் தெரிவித்தன. இதனால் உற்சாகமடைந்த கிரிக்கெட் ரசிகர்கள், பஞ்சாப் அணியை தவிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் அணி மீது பந்தய தொகையை அதிகப்படுத்தினர். இதனால் ஒரே நேரத்தில் பல லட்சம் ரூபாய்க்கு பந்தய தொகை எகிறியது.

AI தளங்கள் வெளியிட்ட தகவல்படி, ராயல் சேலஞ்சர் அணியும் வெற்றி கோப்பையை தட்டி சென்றது. இதனால், பந்தயத்தில் பல லட்சம் ரூபாய் வென்றவர்கள் புக்கிகளுக்கு பல ஆயிரம் ரூபாயை வாரி வழங்கியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!
கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!
ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்; வாணியம்பாடியில் கடத்தப்பட்ட மாணவன் பெங்களூரில் மீட்பு - நடந்தது என்ன?
ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்; வாணியம்பாடியில் கடத்தப்பட்ட மாணவன் பெங்களூரில் மீட்பு - நடந்தது என்ன?
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி… அத்துமீறிய வாலிபர்... காத்திருந்த பேரதிர்ச்சி..! 
வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி… அத்துமீறிய வாலிபர்... காத்திருந்த பேரதிர்ச்சி..! 

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Masoud Pezeshkian on War: “எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
“எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Embed widget