’திருமணத்துக்கு முன்பான உடலுறவு குற்றமல்ல.. ஆனால் !’ - அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து என்ன?
பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட குற்றத்தில் காதலர் ஏதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
திருமணமாகாத இருவர் ஒருவருக்கு ஒருவர் சம்மதத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமல்ல. ஆனால், பாவம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.,
மைனர் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட குற்றத்தில் காதலர் ஏதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் தன் காதலனை பார்க்கச் சென்ற 18 வயது நிரம்பாத பெண்ணை இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் காலை 8 மணிக்கு தையல் பயிற்சிக்குக் கிளம்பியுள்ளார். தையற்பயிற்சி முடித்து தனது காதலனைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
"If a girl is a major one, then to have sex with her consent is not an offence, but certainly it is 𝐮𝐧𝐞𝐭𝐡𝐢𝐜𝐚𝐥 𝐚𝐧𝐝 𝐢𝐦𝐦𝐨𝐫𝐚𝐥 and also not in consonance with the established social norms of the Indian society" : Allahabad High Court #Consent #Morality pic.twitter.com/w3Yym5OpNL
— Live Law (@LiveLawIndia) October 29, 2021
அதன்படி காதலன் ராஜூவின் பைக்கில் பயனித்த இருவரும் அருகில் ஆறு ஒன்றின் அருகே உள்ள தனிமையான இடத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது தனது காதலியிடம் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் எனக் கேட்டுள்ளார். அவர் அதற்கு மறுக்கவும் வலுக்கட்டாயமாகத் தன்னைத் திணித்துள்ளார். அப்போது அந்த சமயம் அங்கே வந்த வேறு இருவர் காதலனைத் தாக்கியுள்ளனர். மேலும் காதலன் ராஜூவைத் தனியே பிரித்துவிட்டு அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து அந்தப் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி போக்ஸோ சட்டம் உட்பட பல பிரிவுகளில் குற்றவாளிகளின் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர குற்றத்தைத் தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்ததற்காக அந்தப் பெண்ணின் காதலன்மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதற்கடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி காதலனுக்கு இந்த வழக்கில் ஜாமீன் தர மறுத்துவிட்டார். மேலும்,’ஒரு காதலனாகத் தனது காதலியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் அவர் தவறிவிட்டார். மேலும் திருமணமாகாத நிலையில் மைனர் பெண்ணுடன் சம்மதத்துடன் உறவுகொண்டால் குற்றம் மேஜர் பெண்ணுடன் சம்மதத்துடன் உறவுகொண்டால் அது ஒழுக்கமின்மை’ என நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளார். மேலும் காதலனாக அவர் செய்த ஒரே காரியம் தன் காதலியை போலீசில் புகார் அளிக்க அழைத்து வந்தது மட்டும்தான் எனத் தனது தீர்ப்பில் கூறியுள்ளனர்.