மேலும் அறிய

கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: கைதான பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன்! உத்தரவு முழுவிபரம் இதோ!

மகளிர் காவல் நிலையத்தில் ஞாயிறுதோறும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. மாணவி குடும்பத்திற்கு 5 இலட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் பகுதியை வேறொரு பள்ளிக்கு மாறினார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டக் கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் செய்து வருகின்றனர். இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: கைதான பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன்! உத்தரவு முழுவிபரம் இதோ!

மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி மேலாடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்ததாகவும், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் மாணவிக்கு உளவியல் ஆலோசணையும் பள்ளி நிர்வாகம் வழங்கியதாகவும், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்டார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவி தற்கொலை குறித்து 4 தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட இரண்டு பேர் யார்?, வேறு யாரேனும் தற்கொலைக்கு தூண்டுனார்களா? தற்கொலைக்கு வேறு எதேனும் காரணங்கள் இருக்கிறதா?உள்ளிட்டவை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: கைதான பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன்! உத்தரவு முழுவிபரம் இதோ!

இந்நிலையில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஜாமீன் வழங்க அரசு மற்றும் மாணவியின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி குலசேகரன், மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஞாயிறுதோறும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்திற்கு 5 இலட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

தலைப்பு செய்திகள்

"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget