மேலும் அறிய

புதுச்சேரி ரெஸ்டோ பாரில் கல்லூரி மாணவர் கொலை; 13 பார்களின் உரிமம் ரத்து!

புதுச்சேரியில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமம் ரத்து

புதுச்சேரி : புதுச்சேரியில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமத்தை ரத்து செய்து புதுச்சேரி அரசு கலால் துறை சீல் வைத்துள்ளது. 

13 ரெஸ்டோ பார்களின் உரிமம்  ரத்து

புதுச்சேரியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மதுபார்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன. இந்த நிலையில், புதிதாக ரெஸ்டோ பார்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பார்களில் மது விருந்தோடு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமும் நடைபெறும். டிஜே போடும் பாட்டுக்கு இங்கு கூடும் இளைஞர்கள் நடனம் ஆடுவார்கள். இந்த ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12 மணி வரை இயங்க கலால் துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், பெரும்பாலான வார இறுதி நாட்களில் இந்த பார்கள் நள்ளிரவை தாண்டியும் இயங்குவதாக தொடர் புகார்கள் வந்தது.

இதனிடையே, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரபாண்டியன். இவரது மகன் மோஷிக் சண்முகபிரியன் (வயது 22). சென்னை அடுத்த செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு விஷூவல் கம்யூனிகேஷன் படித்து வந்தார். அவர் கல்லூரியில் படிக்கும் நண்பரான மதுரை மேலூரை சேர்ந்த ஷாஜன் (23) என்பவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 18-க்கும் மேற்பட்டோருடன் கடந்த 9-ந்தேதி நள்ளிரவு புதுச்சேரிக்கு வந்தனர்.

அவர்கள் மிஷன் வீதியில் உள்ள ஓ.எம்.ஜி. ‘ரெஸ்டோ’ பாருக்கு சென்று பிறந்தநாளை கொண்டாடினர். அதிகாலை வரை கொண்டாட்டம் நீடித்ததால் மதுபோதையில் இருந்த கல்லூரி மாணவர்களை பவுன்சர்கள் வெளியேறும்படி கூறினர். இதனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரெஸ்டோ பார் ஊழியர்கள் கத்தியால் குத்தியதில் மோஷிக் சண்முகபிரியன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஷாஜனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலையில் 11 பேருக்கு தொடர்பு

இது குறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலையில் 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் ரெஸ்டோ பார் ஊழியர் வில்லியனூரை சேர்ந்த அசோக்ராஜ் (26), ரெஸ்டோ பார் உரிமையாளர் முத்தியால்பேட்டை ராஜ்குமார் (31), கேசியர் முத்தியால்பேட்டை சஞ்சய்குமார் (21), ஊழியர்கள் பூபதி என்ற டேவிட் (22), கடலூரை சேர்ந்த அரவிந்த் (29), விழுப்புரத்தை சேர்ந்த பவுன்சர் புகழேந்தி (28) ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர்.

அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் நேற்று இரவு அவர்கள் 6 பேரும் புதுவை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே, கொலையான மோஷிக் சண்முகபிரியன் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

13 ரெஸ்டோ பார்களுக்கு  சீல்

இந்நிலையில் ரெஸ்டோ பார் கொலை எதிரொலியாக, புதுச்சேரியில் நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களுக்கு கலால்துறை சீல் வைத்ததுடன், அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதன்படி புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமத்தை புதுச்சேரி அரசு கலால் துறை தற்காலிகமாக ரத்து செய்து சீல் வைத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget