Crime : ஹாஸ்டல் பாத்ரூம்.. 1200-க்கு மேற்பட்ட நிர்வாணப் படங்கள்.. நாட்டை பதறவைக்கும் பகீர் சம்பவம்..
கர்நாடக போலீசாரின் கூற்றுப்படி, விடுதியின் பெண் மாணவர்களின் வீடியோக்களை பதிவு செய்வதற்காக கழிவறையில் மறைக்கப்பட்ட கேமராவை பொருத்தியதாக மாணவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை ஆபாசமாகப் பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சில மாதங்களிலேயே கர்நாடாகவில் அது போன்ற ஒரு சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் சிறுமிகளின் அரை நிர்வாண வீடியோக்களை பதிவு செய்ததாகக் கூறி தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்நாடக போலீசாரின் கூற்றுப்படி, விடுதியின் பெண் மாணவர்களின் வீடியோக்களை பதிவு செய்வதற்காக கழிவறையில் மறைக்கப்பட்ட கேமராவை பொருத்தியதாக மாணவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவிகளின் 1200க்கும் மேற்பட்ட அரை நிர்வாண வீடியோக்கள் மற்றும் அவர்களின் படங்களை அந்தக் கேமிராவில் பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தெற்கு பெங்களூரு ஹோசகெரேஹள்ளியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சுபம் எம் ஆசாத் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்தக் குற்றவாளி, கழிவறை ஒன்றில் கேமராவை பொருத்தும்போது கையும் களவுமாக பிடிபட்டார். இந்த சம்பவம் நவம்பர் 19ம் தேதி பதிவாகி பிறகு கிரிநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு, போலீசார் குற்றவாளியை வரவழைத்து, அவரது மடிக்கணினியை சரிபார்த்து, 1200 க்கும் மேற்பட்ட பதிவுகள் மற்றும் மாணவிகளின் நிர்வாணப் படங்களை கண்டுபிடித்தனர்.
பின்னர், அவரது சாதனங்களை போலீசார் கைப்பற்றினர் மற்றும் இணையத்தில் ஏதேனும் தனிப்பட்ட வீடியோக்கள் அல்லது படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க விசாரணை நடந்து வருகிறது.
எனினும், மாணவிகளை படம்பிடித்த குற்றவாளி பிடிபடுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, அவர் நவம்பர் 13 அன்று நிர்வாகத்தால் பிடிபட்டார், ஆனால் நிர்வாகம் அவரிடம் எதிர்காலத்தில் அதை மீண்டும் செய்யக்கூடாது என்று சத்தியம் செய்யச் சொல்லி பின்னர் அவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது
பின்னர் நவம்பர் 19 அன்று, மாணவிகளில் ஒருவர் அவரை கையும் களவுமாக பிடித்ததை அடுத்து அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு, சண்டிகரில் உள்ள கல்லூரி ஒன்றில் இதேபோன்ற சம்பவம் பதிவாகியுள்ளது மற்றும் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.
மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் கல்விச் சாலைகளில் இதுபோன்ற தொடர்ச்சியான சகிக்க முடியாத குற்றச் சம்பவங்கள் நடைபெறுவது அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.