மேலும் அறிய

கூட்டுறவு வங்கி கடன் மோசடி: ஒட்டு மொத்த வங்கி அதிகாரிகளும் சிக்கினர்.. 4 பேர் சொத்துக்கள் முடக்கம்!

ஆரணி கூட்டுறவு வங்கி முறைகேடு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நகை மதிப்பீட்டாளர், பல கோடி மதிப்பிலான வீட்டுமனைகள் வாங்கி குவித்ததும், பிரியாணி ஓட்டல் நடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அண்ணாசிலை அருகில் நகர கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகள் வைத்துள்ளனர். மேலும், வங்கியில் அதிமுகவை சேர்ந்த நகர செயலாளர் அசோக்குமார் தலைவராகவும். ஆனந்தன் துணைத்தலைவராகவும் உள்ளனர். வங்கியின் மேலாண்மை இயக்குனராக கல்யாண்குமார், வங்கியின் மேலாளராக லிங்கப்பன், காசாளராக ஜெகதீசன், உதவியாளர் சரவணன், நகை மதிப்பீட்டாளர் மோகன் உள்ளிட்ட இந்த வங்கியில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபுரிந்து வருகின்றனர். மேலும், இந்த வங்கியில் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வங்கியில் கணக்கு வைத்து, பண பரிவர்த்தனை, நகை கடன், வீடு கடன் பெறுதல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல், சிறுவணிக கடன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வங்கி ஊழியர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர், தங்கள் உறவினர்கள் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து பலகோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக கடந்த அதிமுக ஆட்சியின் போது குற்றச்சாட்டுகள் எழப்பட்டது. அப்போது, அதிமுக ஆட்சி என்பதால் இந்த மோசடி தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர்.

கூட்டுறவு வங்கி கடன் மோசடி: ஒட்டு மொத்த வங்கி அதிகாரிகளும் சிக்கினர்.. 4 பேர் சொத்துக்கள் முடக்கம்!

அதனைத்தொடர்ந்து, தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நகை கடன் தள்ளுபடி அறிவித்தது.  இதனைதொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் அதிமுகவை சேர்ந்த தலைவர், துணை தலைவர்களின் மோசடி குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கியிலும் நகை வைத்து கடன் பெற்றவர்களின் பெயர், அடமானம் வைக்கப்பட்ட நகைகள் மற்றும் அதன் உரிமையாளர் குறித்து 100 சதவீதம் ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்தநிலையில் , ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் கடந்த 21ம் தேதியில் இருந்து சில தினங்களாக அடகு நகைகளின் உண்மை தன்மை குறித்து, வேலூர் மண்டல கூட்டுறவு சார்பதிவாளர் சாணக்கியன், வேலூர் சரக மேற்பார்வையாளர் ஜெயபிரகாஷ், நகை மதிப்பீட்டாளர் பழனி மற்றும் பென்னாத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி, கடந்த 21ம் தேதி தொடங்கிய இந்த ஆய்வு, நேற்று இரவு முடிவடைந்தது.

அப்போது ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் 29.12 கோடியில் பொதுநகை கடன்கள் வழங்கப்பட்டிருந்ததும், அதில் 77 நபர்களின் கணக்குகளில் போலி மற்றும் தரம் குறைவான நகைகளை அடகு வைத்து 72.39 கோடி மோசடியாக கடன் பெற்றிருந்ததும் தெரியவந்ததுள்ளது. மேலும் இந்த 5 நபர்கள் மொத்தம் 21லட்சம் மதிப்பிலான எடைகொண்ட நகைகளை அடமானம் வைத்து கூடுதலாக 12 லட்சம் நகை கடன் பெற்று மோசடி செய்துள்ளனர் தெரியவந்தது. அதன்படி மொத்தம் 72.51 கோடிக்கு மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

கூட்டுறவு வங்கி கடன் மோசடி: ஒட்டு மொத்த வங்கி அதிகாரிகளும் சிக்கினர்.. 4 பேர் சொத்துக்கள் முடக்கம்!

இதுதொடர்பாக, திருவண்ணாமலை கூட்டுறவு சங்க இணைபதிவாளர் ராஜ்குமாருக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில், கூட்டுறவு சங்கங்களின் சட்டப்படி முறைகேடு செய்த வங்கி பணியாளர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று முன்தினம் இரவு கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் கல்யாண்குமார் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து, வங்கி மேலாளர் லிங்கப்பன், காசாளர் ஜெகதீசன், உதவியாளர் சரவணன் ஆகிய 3 நபர்களை சஸ்பெண்ட் செய்தும், தற்காலிக பணியாளராக இருந்து வந்த நகை மதிப்பீட்டாளர் மோகனை பணி நீக்கம் செய்தும் இணைப்பதிவாளர் ராஜ்குமார் உத்தரவிட்டார். மேலும் இவர்கள் 4 நபர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு பரிந்துரைத்தனர். அதோடு கூட்டுறவு சங்க தலைவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட மேலாண்மை இயக்குனர் கல்யாணுக்கு  கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியாளராக இருந்தார். இவர் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் நகைகளை எடை குறைவாக மதிப்பீடு செய்து அதற்கான கடன் தொகை வழங்க பரிந்துரை செய்துள்ளார். அவ்வாறு அடகு வைத்த வாடிக்கையாளர்களின் நகைகளை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று. கடன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு அதிகமாக இருக்கும் நகையை சுரண்டி எடுத்துக் கொள்வாராம். இவ்வாறு 330 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்தை திருடியுள்ளதாகவும் அவர் மீது புகார் எழுந்துள்ளது.இந்நிலையில் ஆரணி கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேடுகளை விசாரிப்பதற்காக, வந்தவாசி கூட்டுறவு சங்க சார்பதிவாளர் சேகர், தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விசாரணை நடத்த உள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget