கிருஷ்ணகிரி: சிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய சித்தப்பா - நடவடிக்கை எடுத்த போலீசார்!
அஞ்செட்டி அருகே பள்ளி மாணவியை கர்ப்பம் ஆகிய சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது. உடைந்தயாக இருந்த 7 பேர் கைது செய்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பேடரஅள்ளி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அதே பகுதியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அதேபகுதியைச் சேர்ந்த மாணவியின் உறவினர் கேசவன் வயது (21) கூலித்தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கேசவன் உறவினர் என்பதால் அடிக்கடி அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது . இதன் காரணமாக சிறுமியும், கேசவனும் நெருங்கி நண்பர்களாக பழகிவந்துள்ளனர்.
நாள் அடைவில் கேசவன் காதலிப்பதாக சிறுமியிடம் கூறியுள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட அந்தசிறுமி அவருடன் சேர்ந்து பல இடங்களுக்கு சென்றுவந்துள்ளார். அப்போது கேசவன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வன்கொடுமையில் ஈடுப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
அதன் பிறகு கேசவன் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளாராம் , அதுமட்டுமின்றி அவர் சிறுமி பெற்றோரிடம் கூறி வெளியில் அழைத்து சென்றுள்ளார். வெளியே சென்ற இவர் மேலும் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் தொடர்ச்சியாக வன்கொடுமையில் ஈடுப்பட்டுள்ளார்.
இதனால் அந்த மாணவி கர்ப்பமானார். இந்த நிலையில் அந்த மாணவியை கேசவன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு கேசவனின் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இவர்களின் பழக்கத்தினால் சிறுமி கர்ப்பமாக்கி கருவை கலைத்ததை குறித்து கடந்த மே மாதம் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் கேசவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து கேசவனின் பெற்றோரிடம் சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவத்தை குறித்து முறையிட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து கேசவனின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் சிறுமியின் பெற்றோரை தாக்கியும், மிரட்டியும் உள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் அவரைகளை விசாரணைக்கு அழைத்து வந்தனர் , அதன் பின்னர் ஆய்வாளர் சம்பூர்ணம் விசாரித்து கேசவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். கேசவன் அந்த சிறுமிக்கு சித்தப்பா உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிறுமியின் பெற்றோர் மீது தாக்குதல் நடத்திய கேசவனின் உறவினர்களான சூர்யா என்கிற அழகேசன், பச்சமுத்து (25), ஆனந்தன் (28), பச்சியப்பன் (32), கிருஷ்ணன் (30) ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைதான 6 பேரையும் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பற்ற சூழ்நிலைகள், நிகழ்வுகள் மற்றும் அத்துமீறல், புறக்கணிப்பு, விட்டுவிடுதல் மற்றும் குழந்தைகள் தனிமைப்படுத்துதல் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் அவா்களின் மறுவாழ்விற்கு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், சமூகப்பாதுகாப்புத்துறை, தொடர்பு எண். 04328-275020, மின்னஞ்சல் முகவரி : dcpsperambalurtn@gmail.com அனுக்கலாம்